உலகம் முழுவதும் கொரோனா வைரஸின் கோர தாண்டவம் ஆடிவருகிறது. எப்போது இந்த கொரோன வைரஸின் தாக்கம் குறையும் என்பதையும் கூறமுடியாத நிலை தற்போது, இந்த நிலையில் உலகின் செயல்பாடுகளை கொரோனா மாற்றி அமைத்துள்ளது. சில நன்மைகள் இருந்தாலும் மக்களின் வாழ்வாதாரம் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது. உலகமே சீர்குலைந்து விட்டது இந்த கொரோனவின் கொடூர தாக்குதலால் .
இந்த நிலையில் உலக நாடுகள் கொரோனாவிற்கு தடுப்பூசிகள் கண்டுபிடித்து அதை சோதனை செய்து வருகின்றர்கள் ஆக்ஸ்போர்டு பல்கலை உருவாக்கிய கோவிஷீல்ட் எனும் கொரோனா தடுப்பூசியின் மருத்துவ பரிசோதனை கர்நாடகாவின் மைசூரில் உள்ள JSS மருத்துவமனையில் தொடங்கியது.கொரோனா தொற்று உறுதியான நோயாளியின் பாதிப்பு தன்மை மற்றும் செயல்திறன்களை சரிபார்க்க இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR) சோதனைகளை தொடங்கியதாக அதிகாரி ஒருவர் கூறினார்.
ஆக்ஸ்போர்டு பல்கலை, ஆஸ்ட்ராஜெனிகாவுடன் இணைந்து கொரோனா தடுப்பு மருந்தை கண்டுபிடித்துள்ளது. இந்த தடுப்பு மருந்தை கண்டறிய புனேவில் உள்ள சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியாவிற்கு (SII) அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. நாட்டில் இரண்டாம் கட்ட மனித சோதனைகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட 17 தளங்களில் இதுவும் ஒன்று. நாட்டில் உள்ள பிற 16 இடங்களிலும் இது போன்ற சோதனைகள் நடத்தப்படுகின்றன.
கொரோனாவிற்கு எந்த நாடு மருந்து கண்டுபிடித்தாலும் உலகம் முழுவதும் விநியோகம் செய்ய இந்தியாவின் உதவி அவசியம்.