தமிழக பா.ஜ.க இளைஞரணியின் செயலாளர் வீர திருநாவுக்கரசு நீட் தேர்வு குறித்து அவரின் முகநூல் பக்கத்தில் கூறியுள்ளதாவது : பணக்காரர்கள் பலர் லட்சக்கணக்கில் செலவு செய்து நாமக்கல் போன்ற ஊர்களில் இருக்கும் தனியார் பள்ளிகளில் தங்களது பிள்ளைகளைச் சேர்த்து, எப்படியோ அதிக மதிப்பெண் பெற வைத்துவிடுகிறார்கள்.அவர்கள் அளவுக்கு, அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் பலரால் அதிக மதிப்பெண் எடுக்க முடிவதில்லை. இதனால், அரசு பள்ளி மாணவர்களுள் விரல்விட்டு எண்ணக்கூடிய அளவிலானவர்களுக்கு மட்டும் தான் மருத்துவக் கல்லூரிகளில் இடம் கிடைத்து வந்தது. மற்ற எல்லா இடங்களையும்தனியார் பள்ளிகளில் படித்தபணக்கார மாணவர்களே கைப்பற்றி வந்தார்கள்.
12-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வில் தனியார் பள்ளி மாணவர்கள் அரசு பள்ளி மாணவர்களை விட
அதிக மதிப்பெண் பெற முடிந்ததற்குக் காரணம், பெரும்பாலான தனியார் பள்ளிகளில் 11-ஆம் வகுப்புப் பாடங்களை நடத்தாமல், நேராக 12-ஆம் வகுப்புப் பாடங்களை நடத்தியது தான். அதாவது 12-ஆம் வகுப்புப் பாடங்களை 11-ஆம் வகுப்பிலேயே நடத்த ஆரம்பித்துவிடுவார்கள். அப்போ 11-ஆம் வகுப்புப் பாடம்?அது நடத்தப்படாது! இரண்டு வருடங்களும் 12-ஆம் வகுப்புப் பாடங்கள் மட்டுமே நடத்தப்படும்!
நடத்தப்படும் என்று சொல்வது கூட சரியில்லை; மனப்பாடம் செய்ய வைக்கப்படும். இப்படி இரண்டு வருடங்கள் மனப்பாடம் செய்து, செய்து அதிக மதிப்பெண்கள் எடுப்பார்கள் தனியார் பள்ளி மாணவர்கள்.
11-ஆம் வகுப்புப் பாடங்களை சுத்தமாக படிப்பதில்லை; 12-ஆம் வகுப்புப் பாடங்களைப் புரிந்துகொள்ளும் வாய்ப்பும் கிடைப்பதில்லை. இப்படிப்பட்ட தனியார் பள்ளி மாணவர்கள் மருத்துவம் பயின்றால், மருத்துவக் கல்லூரியின் தரம் என்னவாகும்? இதை முறைபடுத்த வேண்டாமா?
அதற்குத் தான் வந்திருக்கிறது NEET. 12-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வில் என்னதான் மொட்ட மனப்பாடம் செய்து அதிக மதிப்பெண் எடுத்தாலும், பாடங்களை நன்கு புரிந்துகொண்டு படித்தால் மட்டுமே NEET-ல் Pass பண்ண முடியும். பாடங்களைப் புரிந்துகொண்டு படிப்பதில் ஒப்பீட்டு அளவில் தனியார் பள்ளி மாணவர்களை விட அரசு பள்ளி மாணவர்கள் அதிகம். இதற்கான முக்கியக் காரணம் அரசு பள்ளி ஆசிரியர்கள். பெரும்பாலான அரசு பள்ளி ஆசிரியர்கள் தங்களது பாடங்களில் மிகவும் அறிவார்ந்தவர்கள். தகுதித் தேர்வுகளில் வெற்றி பெற்றுத் தான் அவர்கள் அரசு ஆசிரியர்கள் ஆகியிருக்கிறார்கள்.
மாணவர்களை வதைக்காமல் மிக அழகாகப் பாடங்களைச் சொல்லிக் கொடுப்பதில் பெரும்பாலான அரசு பள்ளி ஆசிரியர்கள் திறன் வாய்ந்தவர்கள். அவர்களிடம் படிக்கும் அரசு பள்ளி மாணவர்கள் அறிவில் யாருக்கும் இளைத்தவர்கள் இல்லை. முறையான வழிகாட்டுதல் இருந்தால் அரசு பள்ளி மாணவர்கள் எதையும் சாதிப்பார்கள். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே புகழ்பெற்றிருந்த நாலந்தா பல்கலைக்கழகமே நுழைவுத் தேர்வு நடத்தித் தான் மாணவர்களை சேர்த்துக்கொண்டது. சவால்கள் நிறைந்த இந்தக் காலத்திலும்
நுழைவுத் தேர்வு அவசியம்.
NEET வருவதற்கு முன்பு தனியார் பள்ளிகளில் படித்து வந்தப் பணக்கார மாணவர்கள் தான் அதிகளவில் மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்து வந்தார்கள். NEET வந்ததற்குப் பின்பு தான் 400-க்கும் மேற்பட்ட அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப் படிப்புகளில் இடம் கிடைத்திருக்கிறது. Thanks to 7.5% Reservation.தமிழகத்திடல் உள் ஒதுக்கீடு எல்லாவற்றிற்கும் மேலாக 12-ஆம் வகுப்பில் just pass பண்ணிய ஒரு பணக்கார மாணவன், எந்தத் தகுதியும் திறமையும் இல்லாவிட்டாலும் கோடி கோடியாய் பணம் கொடுத்து MBBS ஆகிவிடலாம் என்றிருந்த மோசமான நிலைக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறது NEET.
ஏழையோ, பணக்காரனோ நன்றாகப் படிக்கும் மாணவனுக்கு மட்டுமே மருத்துவக் கல்வி என்று NEET-ன் மூலம் உறுதி செய்யப்பட்டிருக்கிறது. கோடிகோடியாய் பணம் வைத்துக்கொண்டு, தங்களது பணபலத்தால்
கௌரவத்திற்காக தங்களது பிள்ளைகளை MBBS ஆக்க முடியாதவர்களும், பணக்காரர்களிடமிருந்து கோடி கோடியாய் பணம் வாங்க முடியவில்லையே என்று ஏங்கும் தனியார் மருத்துவக் கல்லூரி முதலாளிகளும் தான் NEET-ஐ எதிர்க்கிறார்கள்.
தனியார் மருத்துவக் கல்லூரி முதலாளிகள் கொடுக்கும் பணத்துக்காக திமுக & கோ.வும் NEET-ஐ எதிர்க்கிறது.
பணக்காரர்களுக்கு ஒரு பழக்கம் உண்டு. தாங்கள் பாதிக்கப்பட்டால் ஏழைகள் பாதிக்கப்படுவது போல் கிளப்பி விடுவார்கள். NEET விசயத்திலும் அதுதான் நடக்கிறது. நாம் எப்போதுமே எது நியாயமோ அதன் பக்கம் மட்டுமே நிற்போம். அதனால், NEET-ஐ ஆதரிக்கிறோம்.
https://m.facebook.com/story.php?story_fbid=453283276025655&id=100040319595270&sfnsn=wiwspmo
மு.க.ஸ்டாலினின்உச்சிமண்டையில் குட்டியிருக்கும் நீதிமன்றத்திற்கு நன்றி! என பதிவிட்டுள்ளார்