“2011ல் தமிழ் வழியில் பயின்று அனுமதிக்கப்பட்ட மருத்துவ கல்லூரிகளில் மாணவர்களின் எண்ணிக்கையை விட 2021ல் குறைந்தது. இதற்கு காரணம் நீட் தேர்வே” :ஏ கே ராஜன் குழு அறிக்கை.2011ல் தமிழகத்தில் இருந்த தமிழ் வழி கல்வி பயின்ற மாணவர்களின் எண்ணிக்கை பன்மடங்கு குறைந்தது என்பதற்கு காரணம் நீட் தேர்வு அல்ல.
நீட் தேர்வு வருவதற்கு முன்னர் 4 மாவட்டங்களில் இருந்து மட்டும் 50% MBBS இடங்களில் சேர்ந்தனர் 2016 – மொத்த MBBS இடங்கள் – 3608,நாமக்கல் – 957 கிருஷணகிரி – 338 ,ஈரோடு – 230 ,தர்மபுரி – 225 மொத்தம் – 1750 இந்த மாவட்டத்து பெயர்கள் அறிக்கையில் இல்லையே ஏன் ?
2016ல் ஒரே பள்ளியில் இருந்து 220 பேர் மருத்துவ கல்லூரியில் சேர்ந்தனர்4 மாவட்டத்தில் இருந்து மட்டும் 1750/3608 ==> 50% MBBS இடங்கள் 4 மாவட்ட மாணவர்கள் எடுத்து கொண்டார்கள்.நாமக்கல் மாவட்டத்தில் 13 பள்ளிகள் 20க்கும் மேற்பட்ட MBBS இடங்கள் பெற்றுள்ளது
பல ஆண்டுகளாக அரசு பள்ளிகளில் கல்வி தரத்தை உயர்த்துவதற்காக என்ற காரணத்தோடு, தமிழ் வழி கல்வி வகுப்புகளை குறைத்து அதிக அளவில் ஆங்கில வழி பயிற்று கல்வியை புகுத்தியது தமிழக அரசே. குறிப்பாக 1990-91ல் தி மு க அரசு நிதி உதவி பெறும் அரசு பள்ளிகளில் தமிழ் வழி கல்வி வகுப்புகளை ஆங்கில வழி வகுப்புகளாக மாற்ற அனுமதித்தது.
மேலும், 2008-09ல் ஆங்கில வழி கல்விக்கு விதிக்கப்பட்டு வந்த சிறப்பு கட்டணத்தை அகற்றியதும் தி மு க அரசே. அதன் பின் வந்த அ தி மு க அரசும் தமிழ் வழி கல்வியை விட ஆங்கில வழி கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்தது உலகறிந்ததது. மேலும் கடந்த ஜூன் 18,2021 அன்று கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அரசு பள்ளிகளில் மேலும் அதிக அளவில் ஆங்கில வழி பயிற்று வகுப்புகளை அதிகரிக்க இந்த அரசு நடவடிக்கை எடுக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆகையினால், தமிழ் வழியில் பயின்ற மாணவர்களின் எண்ணிக்கை குறைந்திருப்பதற்கு காரணம் நீட் தேர்வு அல்ல என்பதும், அதே நேரத்தில் அரசு பள்ளிகளின் தரத்தை உயர்த்த தமிழக அரசே மாணவர்களின் எண்ணிக்கை குறைய காரணம் என்பதும் கண்கூடு. இனியும் நீட் தேர்வை எதிர்க்காமல் மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு நீட்டுக்கு எதிரான நடவடிக்கைகளை நிறுத்தி கொள்வது நல்லது.
65 பக்க அறிக்கையில் நீங்க படிக்க வேண்டியது மொத்தமே 4 வரிகள்தான்.அடுத்து கேட்க வேண்டிய கேள்வி இந்த சட்டங்கள் கொண்டுவந்த போது (2010,2012).பிரதமர் யார் ?திமுக அமைச்சர்கள் எத்தனை பேர் ? திமுகவிற்கு எத்தனை எம்.பிக்கள் ?