திமுகவின் மூத்த தலைவர் துரைமுருகன் திமுகவில் வருத்தத்தில் உள்ளார் அதனால் அதிமுகவுக்கு வந்தால் அவரை நிச்சயம் வரவேற்போம் என்று அதிமுக அமைச்சர் ஜெயகுமார் கூறியிருக்கிறார். ஒரு மூத்த தலைவருக்கு அதிமுக அழைப்பு விடுத்து இருப்பது ஒரு சாதாரண நிகழ்வாக கருத முடியாது. மேம்போக்கப் பார்த்தால் ஒரு தலைவரை அழைப்பது போல் தெரியும் ஆனால் துரைமுருகன் சாதாரண நபர் கிடையாது வடமாவட்டங்களில் அதிகம் உள்ள வன்னியர் மக்களிடம் செல்வாக்கு பெற்றவர். இப்பொழுது தமிழகத்தில் அரசியல் வெற்றிடம் ஏற்பட்டுள்ளது காரணம் ஜாதி அமைப்புகளைச் தாண்டி தமிழகத்தில் செல்வாக்கு பெற்றவர்கள் கருணாநிதி அவர்களும் ஜெயலலிதா அவர்களும்தான்.
அவர்கள் இல்லாத காரணத்தில் ஜாதி ரீதியாக கவுண்டர் இனத்தில் எடப்பாடியும் தேவர் இனத்தில் சசிகலா மற்றும் ஓபிஎஸ் போன்றவர் அடையாளம் காட்டப்படுகிறார்கள் இதனால் வரும் காலங்களில் கட்சியில் உள்ள ஜாதியின் முக்கிய தலைவர்கள் விலகினால் அந்தக் கட்சிக்கு பாதிப்பு ஏற்படும் செய்யும்.இந்த மாதிரி முக்கியத் தலைவர்கள் பிரிந்தால் வருங்காலத்தில் அதிமுகவுடன் திமுகவின் ஒரு பிரிவு இணைந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
இது ஒருபுறம் இருக்க பா.ஜ.க மாநில துணை தலைவர் கருப்பு முருகானந்தம் திமு பாஜகவின் ஆட்களை இழுக்க நினைத்தால் அதே பாணியில் திமுகவின் சட்டமன்ற உறுப்பினர்களை பாஜக இழுக்கும் என சாவல் விட்டுள்ளார். மேலும் திமுகவின் எம்.எல்.ஏ குக செல்வம் பாஜகவில் இருக்கிறார். அவரும் பல திமுகவினரிடம் பேசி வருவது குறிப்பிடத்தக்கது.
திமுகவின் துணை பொதுச்செயலாளர் இருந்த வி.பி.துரைசாமி பாஜகவில் ஐக்கியமானார். அவருக்கு பாஜகவில் துணைதலைவர் பதவி கொடுக்கப்பட்டது. இதிலிருந்து திமுக மீள்வதற்குள் அடுத்தடுத்து ஷாக் கொடுக்கிறது பா.ஜ.க பல்வேறு திமுக மாவட்ட அளவிலான நிர்வாகிகள் பா.ஜ.கவை நோக்கி வர தொடங்கினார்கள். கோவையில் திமுக மாவட்ட வழக்கறிஞர் அணி மாவட்ட நிர்வாகிகள் பாஜகவில் இணைந்தனர்.
இந்த நிலையில் அதிமுக நேரடியாக திமுகவின் பொருளாளர் துரைமுருகனை அழைத்திருப்பது திமுகவில் பெரும் புயலை உருவாக்கியுள்ளது.மேலும் கனிமொழிக்கும் ஸ்டாலினுக்கும் இடையே பனிப்போர் தீவிரமாக அதன் ஆணி வேராகத்தான் இருக்கும். திருச்சியிலிருந்து முக்கிய பொறுப்பாளர் பாஜகவிடம் பேசிவருவதாக தகவல் வெளியாகி உள்ளது.மேலும் கறுப்பர் கூட்டம் முதல் புதிய கல்விக்கொள்கை EIA பற்றி தவறான விமர்சனம் வைப்பவர்கள் யார் என்ற லிஸ்டும் டெல்லிக்கு சென்றுள்ளது.
மேலும் கடந்த ஞாயிற்று கிழமை தமிழகம் முழுவதும் இந்து மக்கள் அனைவரும் ஒருகிணைந்து ஒற்றுமையுடன் நேற்று நடைபெற்ற ‘வேல் பூஜை’ யில் கிராமப்புற மக்களிடத்தில் ஏற்பட்டு இருக்கின்ற ஆன்மீக எழுச்சி கண்டு டெல்லியில் பேசப்பட்டுள்ளது உள்ளது.
வெற்றி வேல் ! வீர வேல்! என எங்கும் எதிரொலித்தது வீடுகளில் வேல் பூஜை செய்து கந்த சஷ்டி கவசம் படித்து தமிழ்கடவுள் முருகனை வணங்கினர். தமிழகம் மட்டுமின்றி உலகமெங்கும் வசிக்கும் தமிழக மக்கள் முருகனை வழிபட்டனர். தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் ,தமிழக பாஜக தலைவர்கள் மற்றும் இந்து மக்கள் கட்சினர் வேல் பூஜை செய்து முருகனை வழிபட்டார்கள்.
இதனை மைய புள்ளியாக வைத்து திட்டமிட்டு வருகின்றார்கள் டெல்லி வட்டாரம். மேலும் திமுக முன்னாள் அமைச்சர்கள் மீதுள்ள பழைய புகார்களை டெல்லிக்கு அனுப்பிவைக்குமாறு எடப்பாடி பழனிசாமிக்கு உத்தரவு வந்துள்ளதாம். இதுதான் தனக்கு கிடைத்த வாய்ப்பு என தமிழக முதல்வரும் அந்த பணியினை துவக்கி உள்ளாராம். கனிமொழி 2021 ல் திமுகவின் வெற்றிக்கு தடை போடுவார் என்பது தான் டெல்லியின் கணக்கு. அங்கு இங்கு அடிக்காமல் திமுகவின் ஆணிவேரை வெட்ட ஆரம்பித்துள்ளது அதிமுகவும் பாஜகவும்.
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















