கடந்த 2019 பாரளுமன்ற தேர்தலுக்கு பின், கொரோனா பரவல் காரணமாக பா.ஜ.க தேசிய அளவில் நிர்வாகிகள் கூட்டம் நடத்தப்படவில்லை. இதனை தொடர்ந்து இந்நிலையில் பா.ஜ.க வின் உயர் அதிகாரமிக்க தேசிய செயற்குழு கூட்டம், டில்லியில் பாஜக தேசிய தலைமை அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. இதில் பல முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.
செயர்குழு கூட்டத்தில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா உ.பி.முதல்வர் யோகி, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பா,ஜ,க மூத்த தலைவர்கள் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி உள்ளிட்ட தலைவர்கள் காணொளி காட்சி மூலம் கலந்து உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு உரையாற்றினார்கள்.
டெல்லியில் நடைபெற்ற கூட்டத்தில் கட்சியின் தேசிய நிர்வாகிகள், தேசிய செயற்குழு உறுப்பினர்களாக இருக்கும் மத்திய அமைச்சர்கள், டில்லியைச் சேர்ந்த தேசிய செயற்குழு உறுப்பினர்கள் என, 124 பேர் மட்டுமே கூட்டத்தில் நேரடியாக பங்கேற்றனர். மற்ற உறுப்பினர்கள் தங்கள் மாநிலங்களில் இருந்தபடி, ‘வீடியோ கான்பரன்ஸ்’ வழியாக பங்கேற்றனர்.
இக்கூட்டத்தில் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் நடைபெற இருக்கும் உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், கோவா, மணிப்பூர் ஆகிய 5 மாநிலங்களுக்கு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. 5 மாநிலங்கள் தேர்தல் குறித்து இந்த செயற்குழு கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. மேலும் 4 மாநிலங்களில் ஆட்சியில் இருக்கும் பாஜக மீண்டும் ஆட்சியை கைப்பற்றவும் பஞ்சாப்பில் தற்போது அரசியல் சூழ்நிலை குறித்தும் விவாதிக்கப்பட்டுள்ளது.
பாஜகவில் செயற்குழு கூட்டம் எடுக்கும் முடிவு தான் அதிகாரமிக்கது. எனவே இக்கூட்டம் தேசிய அளவில் முக்கியத்துவம் பெற்றது. இந்த கூட்டத்தில் உபி முதல்வர் யோகி ஆதித்யநாத் பாஜகவின் அரசியல் தீர்மானங்களை முன்மொழிந்தார் இந்த தீர்மானத்தினை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வழி மொழிந்துள்ளார். இது தமிழக அரசியலில் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
பிரதமர் மோடி உள்துறை அமைச்சர் அமித் ஷா அத்வானி உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்ட கூட்டத்தில் உத்திர பிரதேச முதல்வர் யோகி முன்மொழிய அதனை கடந்த ஆண்டு கட்சியில் இணைந்து இளம் வயதில் மாநில தலைவராக இருக்கும் அண்ணாமலை வழி மொழிந்தது அண்ணாமலையின் முக்கியத்துவத்தை வெளிப்படுத்துவது போன்று அமைந்துள்ளது.
மேலும் தமிழகத்திதற்போது ஆளும் கட்சியினை தினம் தோறும் அலற விட்டு வரும் அண்ணாமலையினை மோடி அமித்ஷா கூட்டத்தில் முன்னிலைபடுத்தியது ஆளும் கட்சியினை சற்று கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது.
மோடி அமித் ஷா நட்டா பேசிய பிறகு அண்ணாமலைக்கு அதிக முக்கியதுவம். இன்று டில்லியில் நடந்த பாஜக தேசிய குழு கூட்டத்தில். மிகவும் இளம் வயது மாநில்த் தலைவரை தேசிய அரசியல் நிலை குறித்த தீர்மானத்தினை வழிமுனைந்தார். என டெல்லியில் வசிக்கும் தமிழகத்தின் மிக மூத்த பத்திரிகையாளர் ராஜகோபாலன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். தமிழகத்தில் இனி பாஜக அரசியல் சூடு பிடிக்கும் என்பதை இந்த சம்பவம் நிரூபித்துள்ளது.
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















