தமிழக பாஜக தொடர் முன்னேற்ற பாதையில் இருக்கிறது தலைவர் இல்லாத போதும் உள்ளாட்சி தேர்தலில் குறிப்பிட தக்க வெற்றியை பெற்றது. இந்த நிலையில் தமிழக பாஜகவிற்கு புதிய தலைவர் எல்.முருகனை நியமித்தது அதன் தேசிய தலைமை இவர் பட்டியல் இனத்தை சார்ந்தவர் என்பது பாஜகவிற்கு குத்தல் பலமே இதனை சற்றும் எதிர்பார்க்காத தமிழக அரசியல் கட்சிகள் சற்று அதிர்ச்சி அடைந்தது உண்மையே. அதுவும் திமுகவிற்கு கிலியை ஏற்படுத்தியது. ஏனென்றால் இவர் தான் முரசொலி நிலம் தொடர்பாக திமுகவிற்கு நோட்டிஸ் அனுப்பியவர், அதன் தொடர்ச்சியாக பா.ஜ.க வின் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது.
சென்ற மாதம் முன்னாள் திமுகவின் துணை பொதுச்செயலாளர் வி.பி.துரைசாமி பாஜகவில் ஐக்கியமானார். இதிலிருந்து திமுக மீள்வதற்குள் அடுத்தடுத்து ஷாக் கொடுக்கிறது பா.ஜ.க பல்வேறு திமுக மாவட்ட அளவிலான நிர்வாகிகள் பா.ஜ.கவை நோக்கி வர தொடங்கினார்கள். கோவையில் திமுக மாவட்ட வழக்கறிஞர் அணி மாவட்ட நிர்வாகிகள் பாஜகவில் இணைந்தனர்.
பாஜகவின் அடுத்த மூவ் திமுகவை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. அதுதான் பால் கனகராஜ் பாஜகவில் இணைந்தது அதுமட்டுமில்லமல் தமிழ்நாடு இஸ்லாமிய ஜமாத் டாக்டர் .A.முகமது ஃபெரோஸ் அவர்களும் இணைந்தார்.இவர்களுடன் சுமார் 50 பேர் இணைந்தனர். இஸ்லாமியர்களும் பாஜகவை நோக்கி வர தொடங்கியுள்ளது திமுகவிற்கு சற்று கிலியை ஏற்படுத்தியுள்ளது.
பால் கனகராஜ் ஆறு ஆண்டுகளாக சென்னை வழக்கறிஞர்கள் சங்கத்தின் தலைவராகவும், பார் கவுன்சில் ஆஃப் தமிழ்நாட்டின் உறுப்பினராகவும் இருப்பது குறிப்பிடத்தக்கது. இவர் ஒரு அரசியல்வாதியும் தனியாக தமிழ் மாநில கட்சி என்ற ஒரு கட்சியை நிர்வகித்து வந்தார்.இவர் கடந்த 2015ம் ஆண்டு நடைபெற்ற ஆர்.கே.நகர் தேர்தலின்போது, ஜெயலலிதாவை எதிர்த்து போட்டியிட்டார். தி.மு.க வில் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் திமுகவின் பல்வேறு வழக்கு விசாரணை இவர் தான் கையாண்டு வந்துள்ளார். இப்போது இவரை தங்கள் பக்கம் பாஜக இழுத்து கொண்டுள்ளது சிறந்த ராஜதந்திரமாகவே பார்க்கப்படுகிறது.
பல் கனகராஜ் பாஜகவில் இணைப்பதற்கு தமிழக பாஜக இளைஞர் அணித்தலைவர் வினோஜ் செல்வம் தான் காரணம் என அந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.

இந்நிலையில், இன்று தமிழக பாஜகவில் தன்னை இணைத்து கொண்ட மூத்த வழக்கறிஞர் பால் கனகராஜ் .. தன்னுடைய தமிழ் மாநில கட்சியையும் பாஜகவில் இணைத்துள்ளார்.. இந்த விழாவில் பேசிய பால்கனகராஜ், “சுயநலத்துக்காக பா.ஜ.க வில் இணையவில்லை.பாஜக ஆட்சியில் தான் மக்கள் நிம்மதியாக வாழ்கின்றனர். நிம்மதியான வாழ்வை வழங்கும் ஆட்சியாக பா.ஜ.கவின் ஆட்சி உள்ளதால், அதில் இணைந்துள்ளேன். சாமானியர்களுக்கான ஆட்சி நம் மோடியின் ஆட்சி” என்று புகழாரம் சூட்டினார்.
குறிப்பிட்ட வழக்கறிஞர்கள் மத்தியில் செல்வாக்குஉள்ள பால் கனகராஜ் திமுகவிலிருந்தது இன்னும் பல வழக்கறிஞர்களை பாஜகவுக்கு கொண்டுவருவார் என எதிர்பார்க்கப்படுகிறது. திமுகவுக்கு எப்படியெல்லாம் செக் வைக்கலாம் என்பதற்கும் பாஜக இவரை பயன்படுத்தும்.
மேலும் திமுகவின் மாவட்ட செயலாளர்கள் பாஜகவிடம் பேசிவருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளன. இந்த நிலையில் திமுகவின் இரண்டு முக்கிய எம்பி பாஜக தலைவர்களை சந்தித்துள்ளார்கள். பாஜகவின் மீது திமுகவிற்கு சற்று பயம் வந்துவிட்டதாகவே தெரிகிறது, அதனால் தான் ஸ்டலினும் சில வாரங்களாக அதிமுகவை சாடுகிறார் பாஜகவையோ பிரதமரையோ சாடுவதில்லை என்கிறது அறிவாலய வட்டாரங்கள்!