குருஜி என்ற சேனலில் சர்சைக்குறிய கந்த சஷ்டி கவசம் வீடியோ உட்பட பல இந்துமத தெய்வங்களை அசிங்கப்படுத்தும் வீடியோக்களை வெளியிட்டுள்ளனர்.தற்போது இன்னொரு வீடியோவையும் வெளியிட்டுள்ளனர் தடைசெய்யப்பட்ட சர்சைக்குறிய வீடியோக்களை போடும் இவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.மத்திய சைபர்க்ரைம் குற்றப்பிரிவு காவல்துறை கவனத்திற்கு இதை கொண்டு சொல்கிறேன்.
இந்துக்கள் தினமும் பக்தியுடன் படிக்கும் கந்த சஷ்டி கவசத்தை கேவலமாகவும், ஆபாசமாகவும் விமர்சித்து கறுப்பர் கூட்டம் என்ற இந்து வெறுப்பர் கூட்டம், வீடியோ பதிவு வெளியிட்டு இருந்தது. இதுபோல ஏராளமான வீடியோக்கள் இந்து மதத்தையும், இந்து தெய்வங்களையும் கேவலப்படுத்தி வெளியிட்டு இருந்தனர்.
இது இந்துக்கள் மனதில் ஆறாத ரணத்தை ஏற்படுத்தியது. குறிப்பாக இந்து பெண்கள் கொதிப்படைந்தனர். இதனால் அவர்கள் போராட்டம் நடத்தத் தொடங்கினார்கள். பாஜக உள்பட இந்து அமைப்புகளும் இந்த போராட்டங்களை முன்னெடுத்து சென்றன. ஆனால் திமுக தலைவர் ஸ்டாலின், கறுப்பர் கூட்டத்திற்கு ஒரு சிறு கண்டனம்கூட தெரிவிக்கவில்லை. இதன் மூலம் அவர், கறுப்பர் கூட்டத்திற்கு தொடர்ந்து ஆதரவை வழங்கி வருகிறார் என்பது தெள்ளத்தெரிவாக வெளியானது. இந்நிலையில் பாஜக இளைஞர் அணி நிர்வாகிகள் கறுப்பர் கூட்டத்தை சேர்ந்தவர்களை காவல்துறையினர் கைது செய்ய வேண்டும் இல்லை என்றால் போராட்டம் நடைபெறும் என அறிவித்தார்கள். பின் அதன் தொடர்ச்சியாக சட்ட ரீதியாக காவல் ஆணையரிடம் கறுப்பர் கூட்டம் மீது புகார் அளித்துள்ளனர். இந்த தமிழக பாஜக முக்கிய நிர்வாகிகளும் இளைஞர் அணி மாநில தலைவர் வினோஜ் செல்வம் கொடுத்துள்ளனர்.
இதுதொடர்பாக கறுப்பர் கூட்டம் யூடியூப் சேனலின் நிர்வாகி செந்தில் வாசன், சுரேந்திரன், ஒளிப்பதிவாளர் சோமசுந்தரம் மற்றும் வீடியோ எடிட்டர் குகன் ஆகியோரை கைது செய்து நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர். இந்த நிலையில், தங்களுக்கு ஜாமீன் வழங்க கோரி சோமசுந்தரம், குகன் ஆகியோர் சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.எனினும், மத்திய குற்றபிரிவு காவல்துறை தரப்பில், இருவருக்கும் ஜாமீன் வழங்க எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இருதரப்பு வாதத்தை கேட்ட நீதிபதி, நிபந்தனைகளுடன் இருவருக்கும் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.
இந்த நிலையில் மீண்டும் கறுப்பர் கூட்டம் வேறு ஒரு பெயரில் சேனல் தொடங்கப்பட்டு அதில் இந்துக்களுக்கு விரோதமான வீடியோக்களை பதிவிட்டு வருகிறார்கள். இது குறித்து சைபர் கிரைம் போலீசில் மீண்டும் புகார் தொடுக்கவும் இருக்கிறது இந்து அமைப்புகள்!
https://www.youtube.com/channel/UCsmpvT7w5sYUp9s2jqmyjGQ
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















