Wednesday, February 4, 2026
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home செய்திகள்

வங்கதேசத்தில் தொடரும் இந்துக்களின் மீதான தாக்குதல். அமைதி வழியில் போராடிய இந்து சன்யாசி கைது. மத்திய அரசு உடனே நடவடிக்கை எடுக்கவேண்டும் ஹிந்து முன்னனி அறிக்கை

Oredesam by Oredesam
November 28, 2024
in செய்திகள்
0
வங்கதேசத்தில் தொடரும் இந்துக்களின் மீதான தாக்குதல். அமைதி வழியில் போராடிய இந்து சன்யாசி கைது. மத்திய அரசு உடனே நடவடிக்கை எடுக்கவேண்டும் ஹிந்து முன்னனி அறிக்கை
FacebookTwitterWhatsappTelegram

வங்கதேசத்தில் தொடரும் சிறுபான்மை இந்துக்களின் மீதான தாக்குதல். அமைதி வழியில் போராடிய இந்து சன்யாசி கைது. மத்திய அரசு உடனே தலையிட்டு இந்துக்களை பாதுகாக்க வேண்டும் – ஹிந்து முன்னனி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் அறிக்கை

வங்கதேசத்தில் சில மாதங்களுக்கு முன்பு இட ஒதுக்கீடு சம்பந்தமான மாணவர்கள் போராட்டம் கலவரமாக உருவெடுத்தது. பிறகு அந்தப் போராட்டம் அங்குள்ள சிறுபான்மை இந்துக்கள் மீதான தாக்குதலாக வடிவெடுத்து , மாபெரும் பாதிப்புக்கு உள்ளாக்கும் கலவரமாக வெடித்தது. இந்துக்களின் வணிக நிறுவனங்கள் சூறையாடப்பட்டன.

READ ALSO

பள்ளி மாணவர்களிடம் கஞ்சா ! கஞ்சா வியாபாரிகளுக்கு பதவி தரும் திமுக அண்ணாமலை ஆவேசம்.

அமெரிக்கா கருவூலம் நடுங்க… லண்டன் வங்கி அதிர! தங்கத்தை மீட்ட மோடி – இது மோடியின் பதிலடி!

இந்துக்கள் பொதுவெளியில் தாக்கப்பட்டனர். இந்து பெண்கள் மானபங்கப் படுத்தப்பட்டனர் . அங்கே இந்துக்கள் வாழவே வழியின்றி ஒடுக்கப்பட்ட சம்பவங்கள் அரங்கேறின. கலவர நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்ட பிறகும் கூட மீண்டும் வங்கதேசத்தில் ஹிந்துக்கள் மீது மதரீதியான தாக்குதல்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மதக் கலவரத்தை ஏற்படுத்தும் வன்முறையாளர்களை அடையாளம் காண வேண்டும் என குரல் கொடுத்து அமைதி வழியில் போராட்டம் நடத்திய இஸ்கான் அமைப்பின் சன்யாசி சின்மோய் கிருஷ்ண பிரபு வங்கதேச காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவர் மீது ஜாமீனில் வெளியே வர முடியாத படி தேச துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. வங்கதேசத்தில் நடைபெறும் கலவரத்தை உடனடியாக தடுத்து நிறுத்தி வன்முறையாளர்களை அடையாளம் காண வேண்டும் என கூறியவர் மீது தேச துரோக வழக்கு பதிவு செய்திருப்பது வங்கதேசத்தின் அதிகார துஷ்பிரயோகத்தை காட்டுகிறது. அவரை நீதிமன்றத்திற்கு கொண்டுவரும் வழியில் ஏற்பட்ட கலவரத்தில் பல இந்துக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சன்யாசியை ஜாமினில் எடுக்க முன்வந்த வழக்கறிஞரும் மத பயங்கரவாதிகளால் படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. மீண்டும் இந்துக்கள் மீது வன்முறையாளர்கள் கொடூர தாக்குதல் நடத்தி வருகின்றனர். வங்கதேசத்தின் பொருளாதாரத்தில் இந்தியர்களின் பங்கு அளவிடமுடியாததாகும்.

இந்திய வங்கதேசத்தின் பொருளாதாரப் பரிவர்த்தனைகள் நன்றாக நடந்து கொண்டிருந்த வேளையில் மாணவர் போராட்டத்தை மதக் கலவரமாக மாற்றி சிறுபான்மை இந்துக்கள் மீது தாக்குதல் சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறின. வங்கதேசத்தின் இந்த சர்வாதிகாரப் போக்கு அங்குள்ள இந்துக்களை மிகவும் பாதிப்படையை செய்துள்ளது . மதப் பிரிவினைவாதிகளால் நடத்தப்படும் இந்த கலவரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க மத்திய அரசு உடனடியாக தலையிட்டு இந்துக்களை பாதுகாக்க வேண்டும்.

நமது தேசத்தில் உள்ள ஆன்மீக அமைப்புகள் அரசியல் கட்சிகள் சமுதாய அமைப்புகள் ஒன்றாக இணைந்து வங்கதேசத்தில் நடைபெறும் கலவரத்திற்கு எதிராக கடுமையான கண்டனங்களை தெரிவிக்க வேண்டும். அமைதியான வழியில் போராட்டம் நடத்திய இஸ்கான் தலைவரை பாரத நாட்டோடு நெருங்கிய தொடர்பில் இருக்கிறார் என்ற ஒரே காரணத்திற்காக தேச துரோக வழக்கு பதிவு செய்ததை உடனடியாக வங்கதேச அரசு வாபஸ் பெற வேண்டும் அவரை விடுதலை செய்ய வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கிறேன்.

ShareTweetSendShare

Get real time update about this post categories directly on your device, subscribe now.

Unsubscribe

Related Posts

Annamalai
செய்திகள்

பள்ளி மாணவர்களிடம் கஞ்சா ! கஞ்சா வியாபாரிகளுக்கு பதவி தரும் திமுக அண்ணாமலை ஆவேசம்.

February 4, 2026
மோடி
உலகம்

அமெரிக்கா கருவூலம் நடுங்க… லண்டன் வங்கி அதிர! தங்கத்தை மீட்ட மோடி – இது மோடியின் பதிலடி!

January 20, 2026
தெலுங்கானாவில் கால் பாதிக்கும் பா.ஜ.க! தென்னிந்தியாவை நோக்கி படையெடுக்கும் பா.ஜ.க !
செய்திகள்

“திராவிட கோட்டையில் விழுந்த ஓட்டை : அமித்ஷாவின் ஸ்கெட்ச்… திருப்பரங்குன்றம் தீர்ப்பும்… திசைமாறும் தமிழக அரசியலும்!”

January 20, 2026
IND vs US
இந்தியா

டிரம்பின் அழுத்தத்திற்குப் பணியாத இந்தியா: வல்லரசை மண்டியிடச் செய்த மௌனமான வர்த்தகப் போர்” சொல்லி அடித்த மோடி

January 20, 2026
மணலூர்பேட்டை ஆற்றுதிருவிழாவில் நடைபெற்ற கோர சம்பவம்
செய்திகள்

மணலூர்பேட்டை ஆற்றுதிருவிழாவில் நடைபெற்ற கோர சம்பவம்

January 20, 2026
கிழக்கு ஆசிய உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி சொன்ன முக்கிய வார்த்தை.
உலகம்

வங்கதேசத்தில் அடுத்த ஆட்சி யார் எப்படி அமைய வேண்டும் என்பதை தீர்மானித்த மோடி! உலக அரசியலில் புது அத்தியாயம்!

January 3, 2026

POPULAR NEWS

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

November 7, 2021
ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது  ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

October 29, 2021
தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

November 7, 2021
சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

November 11, 2021
ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

November 2, 2021

EDITOR'S PICK

மழைக்காலத்துக்கு முன்பாக தேசிய நெடுஞ்சாலைகளை நல்ல நிலையில் வைத்திருக்கத் தயாராகும் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம்.

மழைக்காலத்துக்கு முன்பாக தேசிய நெடுஞ்சாலைகளை நல்ல நிலையில் வைத்திருக்கத் தயாராகும் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம்.

May 28, 2020

Crashed Lion Air Jet Had Faulty Speed Readings on Last 4 Flights

January 30, 2020

மற்றவர்களிடம் நிதி உதவி பெற்று அகரம் பவுண்டேசன் மூலம் உதவி செய்த ஜோதிகா விளம்பரம் தேடுவது ஏன் ?

August 9, 2020
கிராமங்களுக்கு டிஜிட்டல் பட்டா தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி! காங்கிரஸ் ஆட்சியில் கிராமங்கள் புறக்கணிக்கப்பட்டது

பிரதம மந்திரி வீடுகட்டும் திட்டத்தில் பெரிய முடிவை எடுத்தது மோடி அரசு பயனாளிகளுக்கு மகிழ்ச்சியா ! அதிர்ச்சியா !!

January 13, 2022

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • சேமிப்பு
  • தமிழகம்
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • ராசிபலன்
  • விளையாட்டு

Recent Posts

  • இராணுவத்துக்கு அதிக நிதி ஒதுக்கிய மோடி அரசு ! அச்சத்தில் பாகிஸ்தான் !
  • பட்டபகலில் தொடரும் குற்ற சம்பவங்கள் தமிழகத்தை வன்முறை மாநிலமாக மாற்றும் திமுக-வானதி சீனிவாசன் கண்டனம் !
  • பள்ளி மாணவர்களிடம் கஞ்சா ! கஞ்சா வியாபாரிகளுக்கு பதவி தரும் திமுக அண்ணாமலை ஆவேசம்.
  • “வேல்மாறல் கந்தசஷ்டி கவசம் விளக்கம்” நூல் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட அண்ணாமலை.

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
x