திமுக ஆட்சிக்கு வருவதற்கு முன் எதெற்கெடுத்தாலும் போராட்டம் எங்கு பார்த்தாலும் போராட்டம் அரசின் திட்டங்களுக்கு எதிராக வழக்குகள்,என தமிழகத்தில் சிறிய சிறிய அமைப்புகளுடன் கைகோர்த்து கொண்டு தமிழகத்திற்கு வர வேண்டிய முக்கிய திட்டங்களை தடுத்து. அதிமுக அரசை அடிமை அரசு என கிண்டலடித்தது. மேலும் உதயநிதி முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை எப்படியெல்லாம் மட்டமாக பேச வேண்டுமோ அப்படி எல்லாம் பேசுவார்.இதற்கு கூட்டணி கட்சி கம்யூனிஸ்ட் கை தட்டி வரவேற்றார்கள்.
திமுக ஆட்சி வந்தவுடன் டாஸ்மாக் திறந்தால் போராட்டம் இல்லை,கோவனை காணவில்லை கார்ப்பரேட் கம்பெனிகள் சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்கிறார்கள். சேலம் 8 வழி சாலை வேண்டும் விரைவான நடவடிக்கை தேவை என திமுக அரசு மத்திய அரசை வலியுறுத்தி வருகிறது. புதிய கல்வி கொள்கை திட்டத்தினை எதிர்த்த திமுக அரசு தற்போது அதை செயல்படுத்தி வருகிறது.இதற்கு கம்யூனிஸ்ட் எதிர்ப்பு தெரிவித்து.
திமுக ஆட்சிக்கு வந்தவுடன் திமுகவின் இரட்டை வேடம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. மேலும் ஆளுநர் நடவடிக்கைகளை குறித்து திமுக வாய் திறக்கவில்லை. பா.ஜ.க அரசை விமர்ச்சித்த திமுக தற்போது பாராட்ட ஆரம்பித்துள்ளது. இது திமுக கூட்டணி கட்சிகளின் வயிற்றில் புளியை கரைத்துள்ளது. தி.மு.கவை நம்பி பாஜக மற்றும் பிரதமர் மோடியை விமர்சித்து வந்தார்கள் அவர்கள் மீது வழக்கும் இருக்கிறது. இந்த நிலையில் திமுக பா.ஜ.க பக்கம் நோக்கி நகர்வது கம்யூனிஸ்ட்,போன்ற சிறு அமைப்புகள் அதிர்ந்து போயுள்ளார்கள்.
இந்த நிலையில் விடியல் ஆட்சிக்கு CITU வின் தீபாவளி” மனம்குமுறும்” வாழ்த்துக்கள் என பலகையில் எழுதி திமுகவை விமர்சித்துள்ளது கம்யூனிஸ்ட் கட்சி. அவர்கள் சங்க பலகையில் தீபாவளிக்கு மூன்று நாட்களுக்கு முன்னர் போனஸ் கொடுத்த பெருமை எட்டு நாட்களுக்கு முன்பு முன் பணம் கொடுத்த பெருமை சம்பள பட்டுவாடா சட்டத்தை மீறி காலதாமதமாக சம்பளம் வழங்கும் பெருமை எதிர்க்கட்சியாக இருக்கும்போது போராடுவதும் ஆளும் கட்சியாக வந்தவுடன் அமைதி காப்பதும் பெருமை போக்குவரத்து தொழிலாளர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை தொடங்கிய இடத்திலேயே நிறுத்திய பெருமை பெருமையோ பெருமை விடியல் ஆட்சிக்கு என திமுக அரசினை விமர்சித்துள்ளது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.