மத்தியப் பிரதேசத்தில் நடைபெறும் 3 மாநிலங்களவை எம்.பி.க்களுக்கான தேர்தலில் காங்கிரஸ், பா.ஜ.க தலா ஒரு இடத்தில் வெற்றி பெறும் நிலையில் உள்ளன. அதே சமயம் 3 ஆவது எம்.பி.யை தேர்ந்தெடுப்பதில் இழுபறி இருந்து வருகிறது.இந்த நிலையில் தான் மத்திய பிரேதேசத்தின் காங்கிரஸ் மூத்த தலைவர் ஜோதிர் ஆதித்ய சிந்தியா தலைமையில் அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 17 பேர் மாயமாகினர்.
அவர்கள் பெங்களூருவில் இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளன.இதனால் அதிர்ச்சி அடைந்த மத்திய பிரதேச காங்கிரஸ் மற்றும் முதல்வர் கமல்நாத் நேற்று இரவு அமைச்சர்களுடன் ஆலோசனைமேற்கொண்டார் அப்போது 20 அமைச்சர்கள் ராஜினாமா கடிதத்தை அளித்தனர்.
மத்தியப் பிரதேச மாநில பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள்கூட்டம் இன்று நடக்கிறது. இதில் தற்போதைய நிலைமை குறித்து விவாதிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதற்கிடையில் காங்கிரசின் அடுத்த தலைவர் என்று கூறிய ஜோதிராதித்ய சிந்தியா டெல்லியில்இருக்கிறார் என்ற தகவல் வெளியாகி உள்ளது, அவர் பா.ஜ.க வில் இணைந்து அமைச்சர் ஆகலாம் என்றும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் மத்திய பிரேதேசத்தில் சிந்தியா ஆதரவு 19 எம்.எல்.ஏ.,க்கள் விலகியுள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அப்போது சட்டமன்றத்தில் காங்கிரஸ் கட்சியின் பலம் 97 ஆக குறைந்து விடும்.
இந்த நேரத்தில் காங்கிரஸ் இதுவரை ஆட்சிக்கு ஆதரவாக இருந்த சுயேச்சை 4 பகுஜன் 2 சமாஜ்வாடி-1 என்று 7 எம்எல்ஏ க்களின் ஆதரவை பெற்றாலும் ஆட்சியில் நிலைக்க முடியாது.ஏனென்றால் பிஜேபிக்கு 107 எம்.எல்.ஏக்களின் ஆதரவு உள்ளது அதோடு பகுஜன் 2 சமா ஜ்வாடி-1 சுயேச்சை-4 என்று அந்த 7 எம்எல்ஏ க்களும் பா.ஜ.க விற்கு ஆதரவாகவே இருக்கிறார்கள்.எனவே பா.ஜ.க விற்கு மெஜாரிட்டியை நிரூபிக்க எந்த ஒரு பிரச்சனையும் இல்லை
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















