நமது நாட்டின் தலைப்பகுதியின் கிரீடமாக உள்ள யூனியன் பிரேதேசம் ஜம்மு காஷ்மீர்,370 சிறப்பு சட்டத்தை நீக்கிய பிறகு வளர்ச்சி பாதையில் சென்று கொண்டிருக்கிறது.. இந்த நிலையில் பாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ள காஷ்மீர் பகுதியை மீட்க ஆலோசனைகள் நடைபெற்று வருகிறது.
பாரதம் சுதந்திரம் பெற்ற நாள் முதல் காஷ்மீர் பிரச்சினையாகத் திகழ்ந்து வந்தது.இந்த மாநிலத்தை பாகிஸ்தானுடன் இணைக்க வேண்டும் அல்லது தனி நாடாக்க வேண்டும் என்று பிரிவினைவாத தீவிரவாத அமைப்புகள் போராடி வருகின்றன. பிரிவினைவாதக் கொள்கை கொண்ட 26 அரசியல் கட்சிகளையும், சமூக அமைப்புகளையும் ஒன்றிணைத்து கடந்த 1993-ஆம் ஆண்டு ஹுரியத் மாநாட்டு அமைப்பை உருவாக்கினர்.பிரிவினைவாதத்தை முன்னிறுத்தி பல்வேறு போராட்டங்களை அந்த அமைப்பு நடத்தி வருகிறது.
இந்த நிலையில் நேற்று இரவு அமித்ஷா இல்லத்தில் ஜம்மு காஷ்மீர் பற்றிய உயர்மட்ட ஆய்வு கூட்டம் நடைபெற்றது.இதில் உள்துறை அமைச்சர் அமித்ஷா தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் இந்திய ராணுவ தலைமை தளபதி மனோஜ் பாண்டே ஜம்மு காஷ்மீரின் துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா மத்திய உள்துறை செயலாளர் அஜய் பல்லா ஆகியோர் கலந்து கொண்டார்கள்.
இதில் சர்ப்ரைசாக ஒருத்தர் கலந்து கொண்டார் பொது வெளியில் வெளிச்சம் படாத நபர் அவர் பெயர் ரவி சின்ஹா இவர் யார் தெரியுமா? இவர் தான் இந்தியாவின் வெளிநாட்டு புலனாய்வு அமைப்பான ரிசர்ச்& விங் என்கிற ரா அமைப்பின் தலைவர்.இதில் முக்கிய தகவல் என்றால் ரா அமைப்பின் தலைவர் பொது வெளியில் கலந்து கொள்கிற முதல் மீட்டிங் இது தான்.
பெரிய தலைவர்கள் எல்லாம் திடீரென்று ஜம்மு காஷ்மீர் குறித்து ஒரு மீட்டிங் போடுகிறார்கள் என்றால் அது கண்டிப்பாக மிகப் பெரிய விஷயத்திற்க்காக தான் என டெல்லி தகவல் உறுதிப்படுத்தியுள்ளது. பாரத பிரதமர் மோடியின் உத்தரவின் பேரில் தான் இந்த ஆலோசனை கூட்ட்டம் நடைபெற்று உள்ளது. ஆலோசிக்கப்பட்ட விஷயம் என்னவெனில்அது பாகிஸ்தான் ஆக்கிரமிப்புகாஷ்மீர் மீட்பு தான்.
ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்க ராணுவ நடவடிக்கை தான்.அது என்ன மாதிரியான ராணுவ நடவடிக்கையாக இருக்கும்? காஷ்மீரில் இனி ராணுவ நடவடிக்கை ஏதாவது இருக்கும் என்றால் அது நிச்சயமாக பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்பதற்காகவே இருக்க முடியும். இந்த நடவடிக்கை தேர்தலுக்கு முன்பா தேர்தலுக்கு பின்பா என்பதைகுறித்து தான் ஆலோசனை நடைபெற்றுள்ளது.