தமிழகம் முழுவதும் நேற்று விரிவாக்கப்பட்டமுதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் தொடக்க விழாவில் நடந்தேறிய சம்பவம் கடலூர் அருகே அமைச்சர் வர தாமதமானதால் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட சாப்பாட்டு தட்டுகளை அதிகாரிகள் பறித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் நேற்றைய தினம் தமிழகம் முழுவதும் உள்ள அரசுப் பள்ளிகளுக்கு விரிவுபடுத்தப்படும் என்றும், இதற்காக இந்த நிதியாண்டில் ரூ.404 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது என்ற அறிவிப்பை முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டார்.
இந்த நிலையில் கருணாநிதி படித்த திருக்குவளை பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில், முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தை, விரிவாக்கம் செய்து தொடங்கி வைத்தார் மு.கஸ்டாலின். அதனை தொடர்ந்து மாணவர்களுடன் சேர்ந்து உணவு சாப்பிட்டார்.
இந்த நிலையில் முதலமைச்சர் தொடங்கி வைத்த இந்த திட்டத்தை அனைத்து மாவட்டங்களிலும் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் முன்னலையில் தொடங்கி வைக்கப்பட்டது. கடலூர் மாவட்டம் பட்டூர் அரசுப் பள்ளியில் மாணவர்களுக்கான காலை உணவு திட்டத்தை அமைச்சர் கணேசன் தொடங்கி வைப்பதாக இருந்தது.
அமைச்சர் கணேசன் வர தாமதமானதால் பசியோடு காத்திருந்த மாணவர்களுக்கு வழங்கப்பட்ட சாப்பாட்டு தட்டை, அதிகாரிகள் மீண்டும் எடுத்துள்ளனர். இது மாணவர்களிடையேயும், பெற்றோரிடையும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோ வைரலான நிலையில், அமைச்சரின் வருகை தாமதமானதால், மாணவர்களின் சாப்பாட்டு தட்டை பறித்தது நியாயமா..? என்று சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















