தமிழகத்தில் தி.மு.க ஆட்சிக்கு வருவதற்கு முன் தேர்தலில் பல்வேறு வாக்குறுதி வழங்கப்பட்டன. அதில் முக்கியமானதாக இருந்தது. நீட் தேர்வுக்கு தடை, சிலிண்டருக்கு 100 குறைப்பு, குடும்ப தலைவிக்கு மாதம் 1000 ருபாய் வழங்கும் திட்டம், ஏற்கனவே முதியோருக்கு 1000 ருபாய் வழங்கப்பட்டு வருகிறது திமுக ஆட்சிக்கு வந்தால் 1500 ரூபாயாக வழங்கப்படும். பெட்ரோல் டீசல் விலை குறைப்பு என மக்களை கவரும் பல வாக்குறுதி வழங்கி ஆட்சியையும் பிடித்தது.திமுக.
மேலும் தி.மு.க ஆட்சியமைந்ததும் 100 நாட்களில் மக்களின் பிரச்சனைகளை தீர்ப்பதாக கூறி ஊர் ஊராக சுற்றி ஸ்டாலின் அவர்கள் சுற்று பயணம் செய்து கிராமங்கள் தோறும் மனுக்களை வாங்கி குவித்தார். பெறப்பட்ட அந்த மனுக்களை வாங்கி ஒரு பெட்டிக்குள் போட்டு, பூட்டு போட்டார். பூட்டின் சாவியை அவரே வைத்துக்கொண்டார்.திமுக ஆட்சிக்கு வந்த பிறகு 100 நாட்களை நெருங்கிய நிலையில் எத்தனை கோரிக்கை நிறைவேற்றப்பட்டது என்ற கேள்வி மக்களிடம் எழுந்துள்ளது,. எடுக்க தனி அதிகாரியையும் முதலமைச்சர் ஸ்டாலின் நியமனம் செய்தார்.
இந்த நிலையில் தி.மு.க அரசு தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை எனக்கூறி தமிழகம் முழுவதும் அ.தி.மு.க வினர் அவர்களின் வீட்டு வாசல் முன்பு போராட்டம் நடத்தினர். முன்னாள் முதல்வர் பழனிசாமி, முன்னாள் துணை முதல்வர் பன்னீர் செல்வம், முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்ட அ.தி.முக.,வினர் அவர்களின் வீட்டு வாசலில் பதாகைகள் ஏந்தி போராட்டம் நடத்தினார்கள்.
அ.தி.மு.க வின் ஆர்ப்பாட்டம் சமூகவலைதளமான டுவிட்டரில் டிரெண்ட் ஆனது. திமுகசொன்னீங்களேசெஞ்சீங்களா என்ற ஹேஷ்டாக் தேசிய அளவில் வைரலாகி டிரெண்ட் ஆனது. இதில் திமுக.,வை விமர்சித்து பலரும் கருத்து பதிவிட்டு வந்தனர். ‛‛நீட் தேர்வு ரத்து,பெட்ரோல்டீசல் விலை குறைப்பு குடும்பத்தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ1,000 உள்ளிட்ட பொய்யான வாக்குறுதிகள் மூலம் வெற்றி பெற்று தமிழக மக்களை தொடர்ந்து ஏமாற்றி வரும் அரசு திமுக. விடியல் அரசே? சாராயக் கடைகளை மூடுவது எப்போது?. பொய் வாக்குறுதிகளை சொல்லி மக்களை ஏமாற்றிய திமுகவை கண்டிக்கிறோம். மக்களை வஞ்சிக்கும் ஸ்டாலின் அரசே” இப்படி பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
மேலும் நீட் தேர்வு மின்சார கட்டணம் பெட்ரோல் டீசல் விலை குறைப்பு சிலிண்டருக்கு மானியம் உள்ளிட்ட வாசகங்கள் இந்த ட்விட்டர் பதிவில் பதிவிட்டு திமுகவை ஒரு வழி செய்துவிட்டார்கள். இதற்கு முன் இதே பிரச்சனைகளுக்கு ஸ்டாலின் உதயநிதி அவர்கள் பதாகைகள் ஏந்தி போராட்டம் நடத்தியது தான் அனைவர்க்கும் நியாபகம் வருகிறது. நாம் எதை விதைக்கிறோமோ அதுதான் வளர்ந்து நிற்கும்.!