ரொம்ப பழைய படம் அல்ல..
படத்தை தஞ்சாவூரைச் சேர்ந்த ஜோதிபாண்டியன் இயக்கியிருப்பார். தேசிய விருது பெற்ற அத்திரைப்படம், இட ஒதுக்கீட்டை விமர்சித்திருந்தது.இப்படத்தில் நடிகர் லட்சுமி, ஒரு அரசு ஊழியரின் மகளாகவும்,பிராமண கதாநாயகியாகவும் நடித்தார். அந்த புத்திசாலி மாணவி, ஒரு கலெக்டர் ஆக வேண்டுமென்பதற்காக, தான் ஆதி திராவிடர் சமூகத்தைச் சேர்ந்தவர் என்று பாசாங்கு செய்கிறார். அவர் சொல்லிய பொய் ஒருநாள் அம்பலப்படுத்தப்பட்டு நீதிமன்றத்திற்கு அழைத்துச்செல்லப் படுகிறார். அங்கு அவர் நீதிமன்றத்தில் தான் செய்த செயல்கள் நியாயமானவை என்பதற்காக தன் தரப்பிலிருந்து வாதிடுகிறார்.
இறுதியாக லெட்சுமி இது சட்டப்படி தவறு எனவே ஹிந்து தர்ம படி தண்டனையை ஏற்றுக்கொள்வார்..இந்த படத்தின் நீதி மன்ற வாதம் வசனம் எல்லாம் இப்ப நீங்க தமிழ் சினிமாவில் கற்பனை கூட பண்ண முடியாது…
”பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு சலுகைகள் வழங்குவதில் எனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. ஆனால், பிற்படுத்தப்பட்ட வகுப்புகள் என்பது சாதியால் அல்ல, பொருளாதார அந்தஸ்தால் தீர்மானிக்கப்பட வேண்டும்.” என்று லட்சுமியின் கதாபாத்திரம் கோபமாக நீதிமன்றத்தில் வாதிடுகிறது., “பிற்பட்ட சமூகத்தில் பாரிஸ்டர்களும் உள்ளனர், அதே போல உயர் சமூகத்திலும் சடலங்களை சுமந்து செல்லும் ஆண்களும் உள்ளனர். இங்கு பாஸ்டரின் மகன் பிற்படுத்தப்பட்ட சமூகத்தில் பிறந்தார் என்ற ஒரே காரணத்திற்காக சலுகைகளைப் பெறுகிறார், ஆனால் சடலங்களைக் கொண்டுசெல்லும் நபரின் மகனுக்கு வாய்ப்புகள் மறுக்கப்படுகின்றன. அவர் செய்த ஒரே பாவம் உயர் சமூகத்தில் பிறந்ததுதான் என வாலி வசனம் பின்னி பெடலெடுக்கிறது…
மண்டல் கமிஷனைப் பற்றி தீவிரமான விவாதங்கள் போய்க்கொண்டிருந்த நேரத்தில் இப்படம் வெளியானது.இட ஒதுக்கீடால் மேல்தட்டு மக்களும் பாதிக்கப்படுகின்றனர்.பொருளாதார ரீதியாக இடஒதுக்கீடு வேண்டும் என சொன்ன படம்.
தமிழ்நாடு அரசு முதன்முறையாக தடை விதித்த திரைப்படம்…இட ஒதுக்கீடு பற்றிய சர்ச்சைக்குரிய கருத்தால் இந்த படத்திற்கு தடை விதிக்கப்பட்டு, கிளைமேக்ஸ் மாற்றப்பட்டதும், உச்ச நீதிமன்றத்தால் அனுமதி வழங்கப்பட்டது.இப்ப எவனும் இப்படி எடுக்க யோசிக்க கூட மாட்டான்.எடுத்தாலும் சென்சாரை தாண்டாது..திரைப்படத்தை வாய்ப்பிருந்தால் அவசியம் பாருங்கள் நண்பர்களே..
யூ ட்யூபில் உள்ளது…
கூடுதல் தகவல் :
ரிசர்வேஷனைக் கேலி பண்ற ஒரே ஒரு கிராமத்திலே படத்துக்கு என் கையால விருது கொடுக்கமாட்டேன்’னு சொன்னவர் கலைஞர்!” – கமல் கலைஞருடன் நிறைய நெருங்கிப் பழகியிருக்கேன். அதேபோல் அவருடன் முரண்பட்ட தருணங்களும் உண்டு. 1988-என்று நினைவு. அப்போ இங்கே கவர்னர் ஆட்சி. `நாயகன்’, `வேதம் புதிது’, `வீடு’, வாலி சார் கதை எழுதிய `ஒரே ஒரு கிராமத்திலே’ படம்… என அந்த வருடம் தமிழுக்கு மொத்தம் எட்டு தேசிய விருதுகள். அப்போ யாரைக் கூப்பிட்டு நிகழ்ச்சியை நடத்துறதுனு தெரியலை.
ஜானகி அம்மா, சிவாஜி சார், கலைஞர் கருணாநிதி மூணு பேரையும் கூப்பிட்டு அவார்டு கொடுக்கவைக்கணும்னு அந்த நிகழ்ச்சியையும் நான்தான் நடத்தினேன். இவங்க இருப்பதால், ஜெயலலிதா வர மாட்டார் என்பதால், நான் அவரை அழைக்கவில்லை.
அந்த விழாவில் எல்லோருக்கும் அவார்டு கொடுத்த கலைஞர், `ரிசர்வேஷனைக் கேலி பண்ற படம். கண்டிப்பா அதுக்கு என் கையால நான் விருது கொடுக்கமாட்டேன்’ என்று சொல்லி, `ஒரே ஒரு கிராமத்திலே’ பட இயக்குநர் ஜோதி பாண்டியனுக்கு அவார்டு கொடுக்க மறுத்துட்டார்.
அதுக்குக் காரணம், `ஒரே ஒரு கிராமத்திலே’ படம் பிராமணப் பெண்ணான லட்சுமி, தன்னை ஒரு தலித்னு சொல்லி இடஒதுக்கீட்டில் அரசு வேலை பெறுவது மாதிரியான கதையம்சம் கொண்ட படம். மேலும் `பாலம் பழுதுபட்டு இருக்குனு பைபாஸ் போட்டோம்னா, அது எதுக்கு இப்போ போட்டீங்க?’னு கேட்கிற மாதிரி இருக்கு இந்தப் படம்’னு சொன்னார். ..
நன்றி : புகழ் மகேந்திரன் : வலது சிந்தனையாளர்
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















