“தமிழகத்தின் இந்து அறநிலைய துறை HRCE (1923இல் பிரிட்டிஷ் பாவாடைகளால் இந்துக்களிடமிருந்து கோவில்களை பறிக்க இயற்றப்பட்ட) சட்டத்தை பின்பற்றி பிற மாநிலங்களும் HRCE சட்டங்களை உருவாக்கி, கோவில் சொத்துக்களை சுரண்ட உபயோகிப்பதால், அதை தடுத்து நிறுத்த, இந்து, ஜைன, பௌத்த, சீக்கிய மத வழிபாட்டு தலங்கள் மட்டுமல்லாமல், ‘அனைத்து’ மத வழிபாட்டு தலங்களுக்கும் பொதுவான அறநிலைய அமைப்பை ஏற்படுத்த உச்ச நீதிமன்றம் உத்தரவிடவேண்டும்” – என உச்சநீதிமன்றத்தில் பாஜக உறுப்பினரும் வழக்கறிஞருமான அஷ்வின் உபாத்யாய் நேற்று பொது நல வழக்கு தொடுத்திருக்கிறார்.
கோவில்கள் தான் தெய்வீகம், தேசியம், கல்வி, கலை என அனைத்துக்கும் ஆதாரமாக இருந்ததால், அதை ஒழிக்க பிரிட்டிஷ் பாவாடைகள் கொண்டு வந்தது இந்த HRCE. பிரிட்டிஷ் பாவாடை கைத்தடிகளால் உருவாக்கப்பட்ட நீதிக்கட்சி பின்னர் திக ஆகி திமுக அதிமுக என ஆகி, இன்னும் கோவில்களை இந்துக்களிடம் சென்று சேராமல் தடுத்துவருகின்றன. இந்த HRCE சட்டம் வழிபாட்டு தலங்களை பாரபட்சமாக நடத்துகின்றன. அது, பிரிவுகள் 14, 15, 26க்கு எதிரானது என தன் வாதத்தை வைத்திருக்கிறார் உபாத்யாய். பல முக்கியமான பொதுநல வழக்குகளை தொடுத்திருக்கிறார் உபாத்யாய்.
அதில் இதுவும் ஒன்று. பல வழக்குகளையும் முறைப்படி நியாயம் வழங்காமல், ‘அங்கே போ, இங்கே போ’ என கை காட்டி விட்டது பஞ்சாயத்து என்பதும் குறிப்பிடத்தக்கது. இம்முறையாவது இந்த வழக்கில் மத்திய அரசை பதில் சொல்ல அழக்க வேண்டும் உ.நீ. அப்படி அழைத்தால், HRCEக்கு முடிவு வரும் என்பது என் கருத்து. அரசு தலையீடில்லாத அயோத்தி ராம் மந்திர் டிரஸ்ட் போன்ற அமைப்பை மத்திய அரசு பிற வழிபாட்டு தலங்களுக்கும் பரிசீலித்து வருவதாக செய்தி உண்டு.
கட்டுரை வலதுசாரி சிந்தனாளியாளார்.