கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் சட்டமன்ற தொகுதியில் , தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் “என் மண் என் மக்கள்” பாதயாத்திரை நடைபெற்றது.திருக்கோவிலூர் நகர் 5 முனை சந்திப்பிலிருந்து நகரின் முக்கிய வீதிகள் வழியாக வந்து, பேருந்து நிலையம் முன்பு அமைக்கப்பட்டு இருந்த மேடையில் அண்ணாமலை சிறப்புரை ஆற்றினார். அப்போது மேடையில் பேசிய அண்ணாமலை:-திருக்கோவிலூரில் வரலாறு குறித்து பேசினார்.
பின்பு காங்கிரஸ் ஆட்சியின் போது 12 லட்சம் கோடி ஊழல் செய்ததாகவும் பேசினார்.
காங்கிரஸ் ஆண்டபோது 12 மத்திய அமைச்சர்கள் தமிழகத்திலிருந்து செயல்பட்டதாகவும் ஆனால் தமிழகத்திற்கு எந்த ஒரு திட்டத்தையும் கொண்டு வரவில்லை என தெரிவித்தார்
திருக்கோவிலூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தமிழ்நாடு உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி மீதுள்ள வழக்குகள் குறித்து பொதுமக்களிடம் எடுத்துரைத்தார்
ஊழல் பெருச்சாளிகளுக்கு திருக்கோவிலூர் பொதுமக்கள் மன்னிப்பே கொடுக்கக் கூடாது என ஆதங்கம் தெரிவித்தார்
பொன்முடி பேசிய விமர்சனத்திற்கு உரிய வார்த்தைகளை பட்டியலிட்டு பேசினார் அண்ணாமலை
சென்னை உயர்நீதிமன்றத்தில் தர்மத்தின் படி முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு தண்டனை கிடைத்துள்ளது என தெரிவித்தார்
தமிழ்நாட்டு முதலமைச்சரின் நாற்காலியில் உள்ள நான்கு கால்கள் லஞ்சம், குடும்ப அரசியல், அடாவடித்தனம், ஜாதி எனக்கூறி எடுத்துரைத்தார்.
தமிழகத்தில் லஞ்சம் இருக்கும் வரை ஏழை தாய்களும் ஏழை குழந்தையும் பிறந்து கொண்டே தான் இருக்கும் என ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.
மூட்டை தூக்குவதற்கு கூட தகுதி இருக்கும் நபரை தேர்ந்தெடுக்கும் மக்கள் அரசியல்வாதிகளை தேர்ந்தெடுக்க ஏன் தகுதி இருக்கிறதா என பார்ப்பதில்லை
கலைஞரின் மகன் ஸ்டாலின், ஸ்டாலின் மகன் உதயநிதி என இந்த தகுதி மட்டுமே போதுமா? என மேடையில் பேசினார் அண்ணாமலை.
வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் அதிக வழக்குகள் பதிவு செய்யப்படுவது தமிழகத்தில் தான் எனவும், இரட்டை குவளை மற்றும் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த ஊராட்சி மன்ற தலைவர் தேசிய கொடியை கூட ஏற்ற அனுமதிக்கப்படாத நிலை இன்னும் இருந்து வருகிறது என கூறினார்.
மறைந்த தேமுதிக நிறுவன தலைவர் விஜயகாந்த் குறித்து மேடையில் பேசுங்கள் என தேமுதிக தொண்டர் கூறியதை அடுத்து, தமிழகத்தில் இரண்டு பெரிய கட்சிகளுக்கு அப்பாற்பட்டு, மூன்றாவது ஒரு கட்சி வர முடியும் எனவும் எப்பொழுதாவது இதுபோன்ற நல்ல மனிதர்கள் அரசியல்வாதிகளாக வருவார்கள் எனவும் 2005 முதல் 11 வரை இரண்டு முறை சட்டமன்ற உறுப்பினராக விஜயகாந்த் இருந்தார், அவரை கௌரவிக்கும் விதமாக மத்திய அரசு உயரிய விருதான பத்மபூஷன் விருதை தேமுதிக நிறுவன தலைவர் விஜயகாந்த்திற்கு வழங்கி அவரை கௌரவித்தார்
இந்த கூட்டத்தில் விழுப்புரம் தெற்கு மாவட்ட பாஜக தலைவர் கலிவரதன், பாஜக மாநில துணை தலைவர் ஏ.ஜி.சம்பத், மாவட்ட சுற்றுப்புற சூழல் பிரிவு தலைவர் ராதாகிருஷ்ணன், தரவு மேலாண்மை பிரிவு மாநில செயலாளர் கார்த்திகேயன், மாவட்ட பொதுச்செயலாளர் முரளி,நகர தலைவர் பத்ரி நாராயணன், இளைஞர் அணி மாநில செயற்குழு உறுப்பினர் ஹரிகிருஷ்ணன்,மாவட்ட துனை தலைவர் வசந்தன், மாவட்ட செயலாளலர் புவனேஷ்வரி,மாவட்ட செயற்குழு உறுப்பினர் ராஜாஜி,நகர பொது செயலளாலர்கள் பிரபாகரன,சங்கர்,நகர பொருளாளர் ரமேஷ் உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் இந்த கூட்டத்தில் கலந்துகொண்டனர்.