தென்னிந்திய திருச்சபையின் 75வது ஆண்டு விழா ராயப்பேட்டையில் உள்ள தூய ஜார்ஜ் பேராலயத்தில் நேற்று நடந்தது.முதல்வர் மு.க.ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் திமுக எம்பிக்கள், எல்.எல்.ஏக்கள், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
நிகழ்ச்சியை துவக்கி வைத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: நாடு முழுக்க கல்வி நிறுவனங்களையும், மருத்துவமனைகளையும் உருவாக்கி அனைவருக்கும் கல்வி மற்றும் மருத்துவம் என்ற லட்சியப் பாதையில் வெற்றிப்பயணம் செய்து கொண்டிருக்கக்கூடிய இந்த திருச்சபை தமிழ்நாட்டிற்கும், இந்திய நாட்டிற்கும் கிடைத்த அரிய கருவூலம்.
இந்தியாவின் மத நல்லிணக்கத்திற்கும் மதசார்பின்மைக்கும் ஏற்ற சாதி, சமயமற்ற நல்வாழ்விற்காக தென்னிந்திய திருச்சபை இதுவரை ஆற்றியுள்ள ஆக்கப்பூர்வமான பணிகளை நன்றியுணர்வுடன் நினைவுகூர்ந்து தென்னிந்திய திருச்சபை இன்னும் பல நூறு ஆண்டு காலம் கம்பீரமாக தனது வெற்றிப்பயணத்தை தொடர்ந்திட முன்னெடுக்கும் அனைத்து முயற்சிகளிலும் அமோக வெற்றி காணவும் முழு மனதோடு என் வாழ்த்துகளை தெரிவித்துக்கொண்டு, இன்றைக்கு தமிழகத்திலே நடந்து கொண்டிருக்கக்கூடிய அரசு உங்களால் உருவாக்கப்பட்டிருக்கக்கூடிய அரசு.நான் பலமுறை அடிக்கடி எடுத்துச் சொல்லிக் கொண்டிருப்பது நான் எனது அரசு என்று சொல்லமாட்டேன் அல்லது எங்களுடைய அரசு என்று கூறமாட்டேன்.
இது(கிறிஸ்தவர்களாகிய) நம்முடைய அரசு. ஆகவே,(சிறுபான்மையின) மக்களுக்கு பணியாற்றுகிற அரசாக, உங்களால் உருவாக்கித் தரப்பட்டிருக்கக்கூடிய அரசாக இந்த அரசு என்றைக்கும் இருக்கும். இவ்வாறு முதல்வர் பேசினார்.இந்து பண்டிகைகளுக்கு மட்டும் வாழ்த்து சொல்லாமல் இருப்பதுதான் மதசார்பற்ற அரசு என கூறும் முதல்வரும்,இந்து அறநிலையதுறை அமைச்சரும் திருச்சபை கூட்டத்தில் பங்கு பெற்று இந்தியாவில் கல்வி மற்றும் மருத்துவம் உங்களால்தான் கொடுக்கப்பட்டது(பெரியார் அல்ல)இந்த திருச்சபை தமிழ்நாட்டிற்கும், இந்திய நாட்டிற்கும் கிடைத்த அரிய கருவூலம் என்று புகழ்ந்து பாராட்டியுள்ளார்.மேலும் இந்த அரசு என்னுடையது அல்ல நீங்கள் போட்ட பிச்சை என்பது போலவும் இதற்கு கைமாறாக இந்து மதத்தை ஒழிக்க என்ன என்ன ஆலோசனை உங்களிடம் உள்ளதோ அதை கூறுங்கள் அதை எல்லாம் வெற்றிகரமாக செய்து முடிக்க இதோ அழைத்து வந்துள்ளேன் இவர் சேகர் பாபு அல்ல.. செயல்பாபு.
நீங்கள் இரகசியமாக சொல்வதை மிக கச்சிதமாக செய்து இந்து மதத்தை ஒழிக்கும் வேலையை மிக கச்சிதமாக செயல்படுத்தும் வல்லமை படைத்தவர் என கூற,இத்தனை மந்திரிகள் இருக்கும் போது இந்து அறநிலையதுறை அமைச்சரை மட்டும் அழைத்து சென்று அவர்களிடம் ஒப்படைத்து ஆலோசனை பெற செய்திருப்பாரோ? என சந்தேகப்படுவதாக மக்கள் பேசிகொள்கின்றனர்.உண்மையாக இருக்குமோ?
என சமூக ஆர்வலர் ராஜப்பா கருத்து தெரிவித்துள்ளார்.
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















