ஆட்டத்தை துவக்கிய ஆளுநர்! டி.ஜி.பி சைலேந்திரபாபுவுடன் முதல் சந்திப்பு! பயங்கரவாதிகள் பைல்களை கேட்ட ஆளுநர்! அப்போ அந்த 700 பேர் ரீலிஸ்?

இதுவரை தமிழக ஆளுநர்களாக முன்னாள் அரசியல்வாதிகள், கட்சிக்காரர்கள் இல்லை மத்திய அரசில் யாருக்கோ அல்லது மாநில அரசு விரும்பி கேட்டு கொண்டவர்களே ஆளுநராக இருந்தார்கள்.

முதல் முறையாக உளவு மற்றும் காவல்துறையில் நீண்ட அனுபவம் கொண்ட சுருக்கமாக சொன்னால் அஜித் தோவலுக்கு அடுத்த இடத்தில் உள்ளவர் நியமிக்கபட்டிருப்பது இதுதான் முதல்முறை ஆர்.என்.ரவி என அழைக்கபடும் இந்த புதிய ஆளுநர் பாட்னாவில் பிறந்தவர், 1976ல் காவல்துறைக்கு வந்து கேரளாவில் பணியாற்றி பின் மத்திய உளவுதுறைக்கு மாற்றபட்டவர்.

இந்தியாவின் மிக சிறந்த நடவடிக்கைகளில்லாம் அவருக்கு பங்கு உண்டு, காஷ்மீர் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் அமைதி திரும்ப மிகபெரிய நடவடிக்கை எடுத்தவர் வெளியே தெரியாமல் சாகசங்கள் நிறைய உண்டு, மாறுவேடங்களில் உயிருக்கு அஞ்சாமல் நக்சலைட்டுகளுக்குள் ஊடுருவியவர், கள நிலவரத்தை அறிந்து வந்தவர் என மிகபெரிய சாகசங்களை செய்தவர்.

இந்த நிலையில் தமிழக ஆளுநராக நியமிக்கப்பட்ட பிறகு ஆர்.என்.ரவி அவர்கள் முதல் சந்திப்பு டி.ஜி.பி., சைலேந்திரபாபு இது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. முதல்வர் சந்திப்பு முதலில் என எதிர்பார்த்த வேளையில் டி.ஜி.பி.யை சந்தித்தது முதல்வருக்கு ஷாக் என்று கூறுகிறார்கள்!

இந்த சந்திப்பின் போது ஆளுநர் டி.ஜி.பி., சைலேந்திரபாபு விடம் தமிழகத்தின் பயங்கரவாத நடவடிக்கை பற்றி பைல்களை கேட்டுள்ளார். இலங்கை தலைநகர் கொழும்பில், 2019 ஆண்டு ‘ஈஸ்டர்’ தினத்தில், தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர ஓட்டல்கள் என எட்டு இடங்களில் குண்டு வெடிப்பு நிகழ்ந்தது.இதில், 359 பேர் கொல்லப்பட்டனர்; 500க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

இந்த தாக்குதலை ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த சஹ்ரான் தலைமையில், ஒரு பெண் உட்பட ஒன்பது பேர் நடத்தியது தெரிய வந்தது. வெடிகுண்டு தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட சஹ்ரான், தமிழகத்தில் சென்னை மண்ணடி, கோவை; கேரள மாநிலத்தில் பல இடங்களில் தங்கியிருந்ததும், சமூக வலைதளங்கள் வாயிலாக, ஐ.எஸ்., அமைப்புக்கு ஆட்களை திரட்டியதும் விசாரணையில் தெரிய வந்தது.
தமிழகம், கேரளா உள்ளிட்ட தென் மாநிலங்களைச் சேர்ந்தவர்கள், ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பில் சேர்ந்துள்ளனர்.

இது தொடர்பாக, தேசிய புலனாய்வு நிறுவனமான என்.ஐ.ஏ., அதிகாரிகள், 112 பேரை கைது செய்துள்ளனர் என ராஜ்யசபாவில், மத்திய உள்துறை இணை அமைச்சர் கிஷன் ரெட்டியும் கூறியிருந்தார். ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பின் ஒரு பிரிவான, அல் – ஹிந்த் சார்பில், தென் மாநிலத்தில் சில சதி வேலைகளை அரங்கேற்ற திட்டமிட்டிருந்ததும் கண்டறியப்பட்டது.

இந்த அமைப்பை கடலுார் மாவட்டத்தைச் சேர்ந்த காஜா மொய்தீன் என்ற பயங்கரவாதி, டில்லியில் தங்கி வழிநடத்துவது, என்.ஐ.ஏ., அதிகாரிகளுக்கு தெரியவந்தது.இதையடுத்து, காஜா மொய்தீன் மற்றும் அவரது கூட்டாளிகள் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளனர்.

சமீபத்தில், பயங்கரவாத செயலுக்கு ஆட்களை திரட்டி வந்த மதுரையை சேர்ந்த முகமது இக்பால் என்ற செந்தில் குமார் கைது செய்யப்பட்டார். பின், இவரது கூட்டாளிகள் கைதாகினர். இவர்களிடமிருந்து சதி திட்டம் குறித்த 30 புத்தகங்கள் மற்றும் டிஜிட்டல் ஆவணங்களை, என்.ஐ.ஏ., அதிகாரிகள் கைப்பற்றினர்.

மேலும் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு 700 ஆயுள் கைதிகளை விடுதலை செய்வோம் என விடியல் அரசு முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். நேற்று முன்தினம் இஸ்லாமியர் அமைப்புகள் ஒரு லிஸ்டை கொடுத்து லிஸ்டில் உள்ளவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று கூறியது. இதை எல்லாம் கவனித்து கொண்டிருந்த ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்கள் உடனடியாக டி.ஜி.பி., சைலேந்திர பாபு நேற்று காலை சந்தித்து பேசினார்.

இது, மரியாதை நிமித்தமான சந்திப்பு என்று போலீஸ் உயர் அதிகாரிகள் தெரிவித்தனர். ஆளுநர் – டி.ஜி.பி., சந்திப்பின் போது, தமிழகம் உட்பட தென் மாநிலங்களில் பயங்கரவாதிகள் நடமாட்டம் அதிகரித்து வருவது குறித்து, முக்கிய அம்சமாக பேசப்பட்டுள்ளதாக காவல் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

மேலும் ராமலிங்கம் இந்து இயக்க தலைவர்கள் கொலை குறித்த பைல்களையும் கேட்டுள்ளார் எண்ணென்று தகவல்கள் தெரிவிக்கின்றது,.

Exit mobile version