மத்தியப் பிரதேசத்தில் உள்ள மொரேனா நகரத்தில் ரூ 108 கோடியில் கட்டப்பட்ட 1.420 கிலோமீட்டர் நீளமுடைய பாலம் மத்திய வேளாண், விவசாயிகள் நலன், ஊரக வளர்ச்சி, பஞ்சாயத்து ராஜ் மற்றும் உணவுப் பதப்படுத்துதல் அமைச்சர் திரு நரேந்திர சிங் தோமரால் இன்று நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டது.
மத்தியப் பிரதேச முதல்வர் திரு சிவராஜ் சிங் சௌஹான் இந்த விழாவுக்கு தலைமை தாங்கினார். மத்திய அமைச்சர்கள் திரு தவர்சந்த் கெலோட், திரு பக்கம் சிங் குலாஸ்தே, ஜெனரல் (ஓய்வு) வி க் சிங், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் மத்திய மற்றும் மாநில அரசுகளின் மூத்த அதிகாரிகள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
ராஜஸ்தானில் உள்ள தோல்பூரையும், மத்தியப் பிரதேசத்தில் உள்ள குவாலியரையும் இணைக்கும் இந்தப் பாலம் திட்டமிட்டபடி 18 மாதங்களில் கட்டி முடிக்கப்பட்டது.
இந்த நான்கு வழி பாலத்தில் இரு புறங்களிலும் சர்வீஸ் சாலைகள் உள்ளன. மோரேனா நகரத்தின் போக்குவரத்து நெரிசலைக் கருத்தில் கொண்டு, நேரத்தை மிச்சப்படுத்தவும், எரிபொருள் வீணாவதை தடுக்கவும் இப்பாலம் கட்டப்பட்டது.
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















