பாஜக முன்னாள் தேசிய இளைஞரணி செயலாளரும், தற்போதைய மாநில பாஜக செயற்குழு உறுப்பினருமான திரு.கல்யாணராமன் அவர்கள் மீது திமுக எம்.பி உதவியாளர் வழக்கு தொடுத்ததன் காரணமாக, பாகிஸ்தான் பயங்கரவாதிகளை கைது செய்வதை போன்று கைது செய்தது.
அப்போது அங்கு வந்த பாஜக மாநில செயலாளர் திருமதி சுமதி வெங்கடேஷ் அவர்கள், திரு.கல்யாணராமன் அவர்களை கைது செய்வது தொடர்பாக போலீசாரிடம் உரிய விளக்கத்தை கேட்டார்.மேலும்
நாட்டின் பெரும்பான்மை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமரை ஒருமையில் அவன் இவன் என பேசியதோடு போலியாக செய்தி பரப்பிய துணை நடிகை ஷர்மிளாவை ஏன் கைது செய்யவில்லை.என்ற கேள்வியை முன்வைத்துள்ளார்.
ஒரு தொலைக்காட்சி விவாதத்தில் பங்குகொண்ட விடுதலை சிறுத்தை கட்சியின் வன்னி அரசு கடந்த சில வாரங்களுக்கு முன்னர் தமிழக காவல்துறைக்கு விடுதலை சிறுத்தைகளின் பழைய வரலாறு தெரியவில்லை என மிரட்டல் விடுத்தார்.
சில தினங்களுக்கு முன்னர் பிரதமர் மோடி 2000 இஸ்லாமியர்களை கொன்றார் என பொய்யை பொதுவெளியில் தெரிவித்தார் வன்னியரசு மீது காவல்துறை ஆணையரிடம் புகார் கொடுக்கப்பட்ட நிலையில் தற்போதுவரை வன்னியரசை ஏன் கைது செய்யவில்லை.
பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ள சுந்தரவள்ளி போன்றோரை கைது செய்யாத தமிழக காவல்துறை, ஏன் கல்யாண ராமன் விஷயத்தில் இவ்வளவு வேகம் காட்டுவதன் அவசியம் என்ன என்று அடுக்கடுக்காக கேள்விகளை எழுப்பினர்பாஜக மாநில செயலாளர் சுமதி வெங்கடேஷ் அவர்கள். அதற்கு விளக்கத்தை சொல்லத திமுகவின் ஆதரவாக மாறிப்போன தமிழக காவல்துறையின் ஒரு பிரிவினர், திருமதி சுமதி வெங்கடேஷ் அவர்களை ஒரு பெண் என்றும் பாராமல்அடிக்க பாய்ந்தது தமிழக காவல்துறை
காவல்துறை தலைவராக பொறுப்பேற்ற சைலேந்திர பாபு தனது முதல் அறிக்கையில் காவல்துறையினர் பொதுமக்களை ஒருமையில் அழைப்பது, மிரட்டுவது பொன்ற எந்தவிதகாரியத்திலும் ஈடுபட கூடாது என அறிவுரை கூறியிருந்தார்.
இந்த நிலையில் ஒரு பெண்ணை அடிக்க பாய்ந்த காவல்துறை அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சைலேந்திர பாபுவிடம் கோரிக்கை எழுந்துள்ளது.