தமிழகத்தில் கடந்த ஆண்டு மே மாதம் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. மு.க ஸ்டாலின் தலைமையில் திமுக அரசு பதவியேற்றது. திமுக ஆட்சிக்கு வருவதற்கு முன் பல்வேறு இலவச திட்டங்களை வழங்குவோம் என மக்களுக்கு வாக்குறுதி அளித்து ஆட்சிக்கு வந்தது. ஆனால் ஆட்சி கட்டிலில் அமர்ந்தவுடன் கொடுத்த வாக்குறுதியை மறந்து அராஜக ஆட்சி செய்து வருகிறது என பொது மக்கள் குற்றம் சாட்ட தொடங்கியுள்ளார்கள்.
மேலும் தமிழகத்தில் அனைத்து அரசு துறைகளில் லஞ்சம் தலைதூக்கியுள்ளது என்ற செய்திகள் வந்த வண்ணம் உள்ளது, இதில் பல அமைச்சர்கள் தலையீடும் உள்ளது. டாஸ்மாக் மற்றும் மின்துறையை நிர்வகிக்கும் அமைச்சர் மீது பல்வேறு ஊழல் குற்றசாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளது. அதுவும் திமுகவினரே அந்த அமைச்சர் மீது பல குற்றசாட்டுகளை முன்வைக்கிறார்கள். அவரின் அட்டர்சிட்டி தாங்க முடியவில்லை என கொந்தளிக்கிறார்கள் அரசு அதிகாரிகள்.
மேலும் தமிழக அமைச்சர்கள் சிலரின் ஆட்டம் தாங்க முடியலையாம். குறிப்பாக, மூத்த அமைச்சர் ஒருவரும், கவுண்டர், யாதவ சமுதாய அமைச்சர்களும் முன்னணியில் இருக்காங்களாம். இவங்க மேல, துறை ரீதியாகவும், கட்சி ரீதியாகவும் புகார்கள் வரிசைகட்டி நிற்குதாம். ஒரு அமைச்சருக்கு எதிராக முற்றுகை போராட்டம் எல்லாம் நடந்திருக்கு.இந்த விவகாரத்தை எல்லாம், உட்கட்சி சீனியர்களே சிலர், டில்லி பா.ஜ.க மேலிடத்தின் கவனத்திற்கும் கொண்டு போயிருக்காங்களாம்.இதனால் அதிர்ந்து போயுள்ளதாம் அறிவாலயம்.
மேலும் டெல்லியிலிருந்து நெருக்கடி வரலாம் என்பதால், ஆட்டம் போடும் அமைச்சர்களை மாற்ற, தி.மு.க., தலைமை ஆலோசித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. தமிழக அமைச்சரவையில் விரைவில் மாற்றம் இருக்குமாம். சில அமைச்சர்கள் மாற்றம் மட்டுமின்றி, திறம்பட பணியாற்றாத அமைச்சர்களிடம் இருந்து, சில துறைகளும் பறிக்கப்பட உள்ளதாம். புதுமுகங்களுக்கு அமைச்சர் பதவி வழங்கவும் ஆலோசனை நடந்திருக்கு. மூத்த அமைச்சர்களிடம் இருந்து இரண்டு இலாகாக்கள் பிரிக்கப்பட்டு, முதல்வரின் வாரிசுக்கு வழங்கவும் ஏற்பாடு நடக்குதாம். தை பிறந்தால் தான் சிலருக்கு பதவி கிடைக்கும்; சிலருக்கு பதவி பறிபோகும் என்கிறது அறிவாலய வட்டாரம்.
மேலும் அமைச்சர் பதவி கிடைக்காத திமுக சீனியர்ஸ் கடும்கோபத்தில் உள்ளார்கள் மேலும் அவர்கள் டெல்லி பாஜகவிடம் உறவாடி வருகிறார்கள் என்பதும் திமுகவிற்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாம். உதயநிதிக்கு எதிராக ஒரு கூட்டமும் திமுகவில் உருவாகி உள்ளதாம். அவர்கள் கனிமொழிக்கு ஆதரவாக குரல் கொடுக்க ஆரம்பித்துள்ளார்கள். உள்ளாட்சி தேர்தல் நேரத்தில் இந்த சிக்கல் பெரும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளதாம்.
அமைச்சரவை மாற்றினால் பணம் உள்ளாட்சி தேர்தலில் யார் பணம் செலவழிப்பார்கள் உட்கட்சி வேட்பாளர்களுக்கு எதிராக வேட்பாளர்களை நிறுத்துவர்களாக என்ற சந்தேகம் எழுந்துள்ளதால் திமுக உயரம்மட்டம் தீவிர ஆலோசனைகளை மேற்கொண்டுவருகிறார்களாம்.