சொன்னதை செய்து காட்டிய அமைச்சர் மாஃபாய் பாண்டியராஜன் ஆவடியில் ஐ.டி பார்க்!

ஆவடி எம்.எல்.ஏ-வும் தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சருமான மாஃபாய் பாண்டியராஜன் தனது தேர்தல் வாக்குறுதியில் ஆவடியில் தகவல் தொழில்நுட்ப பூங்காவை அமைப்பேன் என்று கூறியிருந்தார். வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில்

ஆவடி அருகே பட்டாபிராமில் ரூ.235 கோடி மதிப்பில் டைடல் தகவல் தொழில்நுட்ப பூங்காவை அமைக்கும் திட்டத்திற்கு முதல்வர் பழனிசாமி காணொலி காட்சி மூலம் அடிக்கல் நாட்டி திங்கள்கிழமை தொடங்கி வைத்தார்.

சென்னை ஆவடி அருகே பட்டாபிராமில் ரூ.235 கோடி மதிப்பில் டைடல் தகவல் தொழில்நுட்ப பூங்கா அமைக்கும் திட்டத்திற்கு முதலவர் பழனிசாமி திங்கள்கிழமை காணொலி காட்சி மூலம் அடிக்கல் நாட்டினார். மாநில தொழில்துறை சார்பில் கட்டப்பட உள்ள இந்த ஐடி பூங்கா பட்டாபிராமில் 10 ஏக்கரில் 5.57 லட்சம் சதுர அடி பரப்பளவில் 21 மாடி கட்டிடம் கட்டப்பட உள்ளது.

இந்த கட்டடத்தில் அலுவலகங்கள், தொழில்துறை மையங்கள், பொது உள்கட்டமைப்பு மற்றும் ஒரு தொங்கும் தோட்டம் ஆகியவை இருக்கும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த புதிய ஐடி பூங்காவின் கட்டுமானப் பணிகள் 2 ஆண்டுகளுக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த ஐடி பார்க் மூலம் சுமார் 25,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தென் சென்னையில் தரமணியில் உள்ள டைடல் பூங்காவைப் போலவே வட சென்னையும் வளர்ச்சி அடைய வழிவகுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது” என்று அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல்வர் பழனிசாமி ஐடி பார்க் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டியபோது, இந்த நிகழ்ச்சியில் மாநில தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் கலந்துகொண்டு மாநில பேரிடர் மீட்பு நடவடிக்கை பணி நிதியாக ரூ.50 லட்சம் வழங்கினார். அப்போது அவருடன் ஆவடி எம்.எல்.ஏ-வும் தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சருமான மாஃபாய் பாண்டியராஜன் உடன் இருந்தார்.

Exit mobile version