சென்னை காமராஜர் சாலையில் உள்ள தமிழ்நாடு மாநில உயர்கல்வி மன்றத்தில், உயர் கல்வித்துறை அலுவலர்கள் உடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. உயர் கல்வித்துறை அமைச்சர் கோவி செழியன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.
இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் கோவி செழியன் கூறியது, “முதலமைச்சர் அறிவிப்பினை செயல்படுத்துவது குறித்து உயர் கல்வித்துறையின் அதிகாரிகளுடன் முதல் ஆய்வுக் கூட்டத்தை நடத்தி உள்ளோம். இந்தியாவில் உயர்கல்வி மாணவர் சேர்க்கையில் தமிழ்நாடு முதலிடத்தில் இருக்கிறது.
தமிழ்நாடு ஆளுநருடன் முரண்பாடு தேவையில்லை என்பதுடன், முறையான நெறி முறைப்படி மாணவர் நலன் காக்க எவை எவை செயல்படுத்த வேண்டியவையோ அவைகளை முறையாக செயல்படுத்த வேண்டும் என முதலமைச்சர் வலியுறுத்தி உள்ளார். எனவே நமது மாநில உரிமை, தமிழ்நாடு அரசின் கல்வி நிலை, உயர்கல்வி நிலையங்களின் கொள்கை நிலை இவைகளை நிலை நிறுத்தித்தான் செயல்பாடுகள் அமையும் .
கடந்த காலங்களில், ஆளுநர் – உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி இடையே மோதல் போக்கு நிலவி வந்தது
ஆளுநர் பங்கேற்ற நிகழ்ச்சிகளை புறக்கணித்து வந்த பொன்முடி.உயர்கல்வித்துறை செயல்பாடுகள் குறித்து தொடர்ந்து விமர்சித்து வந்த ஆளுநர்.பதிலுக்கு ஆளுநரை விமர்சித்து வந்தார் அமைச்சர் பொன்முடி
எனவே முட்டல் மோதல் என்பது என்றைக்கும் இல்லை. என்றும் நட்புணர்வுடன் இந்தத்துறையும், தமிழ்நாடு முதலமைச்சரும் உறுதுணையாக இருப்போம். துணைவேந்தர் தேர்வுக்குழு குறித்து முதலமைச்சருடன் கலத்து பேசி, துணைவேந்தர் நியமனத்தில் உள்ள முரண்பாடுகள் விரைவில் களையப்பட்டு, துணைவேந்தர்கள் நியமனம் நடைபெறும்” எனத் தெரிவித்தார்.
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















