பஹல்காம் தாக்குதலுக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுமாதிரி மறுபடியும் செய்யனும்ன்னு கனவில் கூட நினைக்க கூடாது என்று அவர் ஆவேசமாக கூறியுள்ளார்.ஜம்மு – காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய கொடூரத் தாக்குதல், நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அப்பாவி 26 சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட் இந்த சம்பவம் தீவிரவாதிகள் மீது கடும் கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்த சம்பவத்திற்கு உலக நாடுகளும் தங்களது கண்டனத்தை பதிவு செய்துள்ளன.
இந்த நிலையில், இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு இந்திய கிரிக்கெட் வீரர்களும், திரையுலக பிரபலங்களும் கண்டனத்தையும், இரங்கலையும் தெரிவித்துள்ளனர்.விராட் கோலி; தனது பதிவில் பஹல்காமில் அப்பாவி மக்கள் மீது நடத்தப்பட்ட கொடூர தாக்குதலால் மிகுந்த வருத்தமடைந்தேன். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு அமைதியும், தைரியமும் கிடைக்க பிரார்த்திக்கிறேன்.
இந்த கொடூர செயலுக்கு நீதி கிடைக்க வேண்டும்.கே.எல்.ராகுல்; காஷ்மீரில் நடத்தப்பட்ட தாக்குதலை கேட்டு பெரும் அதிர்ச்சியடைந்தேன். பாதிக்கப்பட்ட குடும்பங்களை பற்றியே என்னுடைய எண்ணம் உள்ளது. அமைதி மற்றும் வலிமை பெற பிரார்த்திக்கிறேன்.
சுப்மன் கில்;பஹல்காம் தாக்குதலை கேட்டு அதிர்ச்சியுற்றேன். பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்காக பிரார்த்திக்கிறேன். நாட்டில் இதுபோன்ற வன்முறைக்கு நாட்டில் இடம் கிடையாது.
இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் கம்பீர்; உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்காக பிரார்த்திக்கிறேன். தாக்குதல் நடத்தியவர்களுக்கு இந்தியா தக்க பதிலடி கொடுக்கும் என நம்புகிறேன், இவ்வாறு கூறினார்.அதேபோல, இந்திய சினிமா பிரபலங்களும் இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர். ராஷ்மிகா மந்தனா, அனுபம் கெர், கரீனா கபூர், விக்கி கவுசல், சித்தார்த் மல்ஹோத்ரா, சஞ்சய் தத், ரவீனா டன்டன், நானி, ஜூனியர் என்.டி.ஆர்., அல்லு அர்ஜூன், அக்ஷய் குமார் உள்ளிட்டோர் தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
ஆனால் தமிழக நடிகர்கள் யாரும் இதுவரை வாய் திறக்கவில்லை ஜாதி, மொழி, இனவாதம் பேசி அதிக அறிவாளிகள் போல பொங்கி எழுந்து, கருத்துகளை கக்கியும், பாஜ, அதிமுக கட்சிகளுக்கு எதிராக வேண்டுமென்றே விமர்சனங்களை செய்தும், ஹிந்து மதத்திற்கு எதிரான கருத்துகளை கூறியும் சமூக வலைதளங்களை சூடுபிடிக்க வைத்த சினிமா நடிகர்கள், இரங்கல் கூட தெரிவிக்காமல் கள்ள மவுனம் காப்பது ஏன் என்று பொது மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
தமிழக நடிகர் சூர்யா, அவரது மனைவி நடிகை ஜோதிகா, பிரகாஷ்ராஜ், சத்யராஜ், சித்தார்த், விஜய் சேதுபதி, நடிகை ஐஸ்வர்யா ராஜேஸ், விஷால், கமல் ஆகியோர் கடந்த காலங்களில் ஜாதி பிரச்னை, மொழி பிரச்னை, இனவாதம், இயற்கை பேரிடர் காலங்களில் அரசின் நடவடிக்கைகளை விமர்சித்து அறிக்கை வெளியிட்டார்கள். சபரிமலை பிரச்னை போன்ற நேரங்களில் ஹிந்து மத நம்பிக்கைகளுக்கு எதிராக பேசினார்கள்.
பாஜவுக்கு எதிராகவும் அதிமுகவுக்கு எதிராகவும் பேசிக்கொண்டு இருந்த இந்த நடிகர்களின் வாய் திமுக ஆட்சிக்கு வந்ததும் தானாகவே மூடிக்கொண்டது. இப்போது நடக்கும் எந்த பிரச்னையும் இவர்களை பாதிக்கவில்லை போலும். இந்த நடிகர்கள் தற்போது வாய் திறக்காமல் ‛கள்ள மவுனம் ‘ காப்பது ஏன் என பலர் கேள்வி எழுப்புகின்றனர் அரசின் அதிருப்திக்கு ஆளாக நேரிடுமோ என்ற பயம் காரணமா என்றும் கேட்கின்றனர்.
அப்படி என்றால் இவர்கள் உண்மையான போராளிகள் இல்லை. சுயநலவாதிகள். சொந்த விருப்பு வெறுப்புக்கு ஏற்ப கருத்து சொல்கிறார்கள் என்றும் கண்டனம் எழுந்துள்ளது.அதே போல புரட்சி போராளிகள் என்று வெளியே நடித்துக்கொண்டு இருந்த ‛‛கப்சா காம்ரேட்”டுகளான கோவன், நந்தினி போன்றவர்கள், திமுக ஆட்சிக்கு வந்ததும் வாயே திறப்பதில்லை. இப்போது அவர்களது புரட்சி கருத்துகள் எங்கே போய் புதைந்துகொண்டது என தெரியவில்லை.
இந்த நிலையில் பஹல்காம் தாக்குதல் குறித்து நடிகர் ரஜினிகாந்த் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், காஷ்மீரில் அமைதி திரும்பியுள்ளது எதிரிகளுக்கு பிடிக்கவில்லை. அதனைக் கெடுக்கனும் இப்படி செய்கிறார்கள். இந்த தாக்குதலில் ஈடுபட்டவர்களையும் அதன் பின்னால் இருப்பவர்களையும் கண்டுபிடித்து கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும். இந்த மாதிரி மறுபடி செய்யனும் என்று அவர்கள் இனி கனவில் கூட நினைக்கக்கூடாது என்று கூறினார்.
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















