மருத்துவ படிப்புக்கான மாணவர் சேர்க்கை ‘நீட்’ நுழைவுத்தேர்வின் அடிப்படையில் நடத்தப்படுகிறது. அந்த வகையில், வரும் கல்வியாண்டுக்கான ‘நீட்’ தேர்வு நாடு முழுவதும் நேற்று நடந்தது. தமிழகத்தில் ‘நீட்’ தேர்வை 1½ லட்சம் மாணவ, மாணவிகள் எழுதினார்கள். அவர்கள் அனைவரும் நீட் தேர்வு தேவையான ஒன்று ஏழைகள் அரசுபள்ளி மாணவர்களுக்கு நீட் தேர்வு ஒரு வரம் என ம்ருத்துவர் ஆகும் கனவை நினைவாக்கும் ஒரு வரம் என மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்கள்.
நீட் தேர்வு குறித்து மாணவர்கள் கூறியது : ‘
நீட்’ தேர்வு வினாத்தாள் எளிதாக இருந்தது. உயிரியல் மற்றும் வேதியியல் பாடங்களில் இருந்து கேட்கப்பட்ட வினாக்கள் மிகவும் எளிமையாக இருந்தது. ஆனால், இயற்பியல் பாடத்தில் இருந்து கேட்கப்பட்ட வினாக்கள் சற்று கடினமாக இருந்தது. நான் எதிர்பார்த்த மதிப்பெண் நிச்சயம் கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.
மாநில பாடத்திட்ட மாணவர் : நான் மாநில பாடத்திட்டத்தில் படித்தேன். முதல் முறையாக நீட் தேர்வை எதிர்கொள்கிறேன். வினாத்தாள் நன்றாகவும் எளிதாகவும் இருந்தது. இயற்பியல் பாடத்தில் பகுதி ‘பி’ கடினமாக இருந்தது. பல்வேறு தீர்வுகளுக்கு விடை அளிக்கும் வகையில் வினாக்கள் இடம் பெற்றிருந்தன. வேதியியல் மற்றும் உயிரியல் பாடத்தில் இருந்து கேட்கப்பட்ட வினாக்கள் எளிதாக இருந்தது.
அரசு பள்ளி மாணவர் சுரேந்தர்:-
அரசு பள்ளி மாணவர் : கன்னிகாபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் படித்தேன். தேர்வு முடிவுக்காக காத்திருக்கிறேன். மருத்துவராக வேண்டும் என்று ஆசை. அதற்காக, நீட் தேர்வுக்கு விண்ணப்பித்தேன். அரசின் உண்டு, உறைவிடத்துடன் கூடிய நீட் பயிற்சியில் சேர்ந்து படித்தேன். தேர்வில் உயிரியியல் பாடத்தில் இருந்து கேட்கப்பட்ட வினாக்கள் எளிதாக இருந்தது. இயற்பியல் மற்றும் வேதியியல் பாடத்தில் இருந்து கேட்கப்பட்ட கேள்விகளும் விடை அளிக்கும் வகையில் அமைந்தது. நல்ல மதிப்பெண் கிடைக்கும் என்று நம்பிக்கை உள்ளது
இந்த நிலையில் சில ஆண்டுகளுக்கு தமிழகத்தில் நீட் தேர்வு நடக்கும் அன்று ஒட்டுமொத்த ஊடகங்களின் கவனமும் அதன் மீது தான் இருக்கும்….தேர்வு அறைக்குள் செல்லும் முன்பு கையில் கட்டி இருக்கும் கயிறை பரிசோதித்தார்கள் தலையில் மாட்டியிருந்த ரிப்பன்னை பரிசோதித்தார்கள் என்று பிரேக்கிங் நியூஸ் எல்லாம் போட்டுக் கொண்டிருப்பார்கள் எப்படி எல்லாம் ஒரு நெகட்டிவ் விஷயத்தை மக்கள் மனதில் விதைக்கலாம் என்று கண்கொத்தி பாம்பாக காத்துக் கொண்டு அதை பெய்டு தொலைக்காட்சிகள் மூலம் மீண்டும் மீண்டும் ஒளிபரப்பி தேர்வு என்றாலே பயத்தை வரவைத்தார்கள்.
என்று தான் முடியுமோ இந்த நீட் தேர்வு என்று திமுகவினர் தங்கள் பங்கிற்கு ஒரு ரைட் அப் தூக்கிக்கொண்டு வருவார்கள் !!திமுக ஆட்சிக்கு வந்த முதல் கையெழுத்தி நீட் தேர்வு தான் என முழக்கமிட்டு 50 லட்சம் கையெழுத்து வாங்கியவரைமக்கள் அவ்வளவு எளிதில் மறக்கமாட்டார்கள்..எங்களிடம் நீட் ஒழிப்பிற்கான ரகசியம் இருக்கிறது என்று கூறிய உதய் அண்ணா தற்போது எங்கு உள்ளார் என தெரியவில்லை.
திமுக ஆட்சியும் வந்தது.அதைவிட முக்கியமாக உதயநிதிக்கு அமைச்சர் பதவியும் வந்துவிட்டது
கூடவே வருடா வருடம் நீட் தேர்வு வந்து கொண்டு தான் இருக்கிறது மற்ற ஆண்டுகளில் ஆவது நீட் தேர்வு நடக்கிறது என்பது பெயரளவிற்காவது சொல்லிக் கொண்டிருந்தார்கள்..ஆனால் இந்த வருடம் நிறைய பேருக்கு நீட் தேர்வு நடந்தது தெரியாத அளவுக்கு கமுக்கமாக இருந்திருக்கின்றன ஊடகங்கள் !!
உதய் அண்ணாவோ ஒரு படி மேல் கோடையை சமாளிக்க லண்டன் சென்று விட்டார்..ஒரு அமைச்சர் தன்னுடைய பொறுப்பில் இருந்து ஒரு பிரேக் எடுத்துக் கொண்டு தனிப்பட்ட பயணம் செல்வது எல்லாம் தவறு இல்லை…ஆனால் கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியாமல் மக்களை ஏமாற்றுகிறோமே என்ற ஒரு சின்ன குற்ற உணர்ச்சியாவது இருக்கிறதா என்பதுதான் மக்களின் கேள்வியாக உள்ளது.
2019 ஆம் ஆண்டில் தமிழகமும் புதுச்சேரியும் சேர்த்து உங்கள் கூட்டணிக்கு மொத்தம் 39 எம்பிகளை வாரி வழங்கினார்கள் மக்கள்..2021 ஆம் ஆண்டு மாநிலத்தில் ஆட்சியையும் உங்களுக்கு வழங்கி விட்டார்கள் மக்கள் !!ஆனாலும் நீட் தேர்வை ஒழித்த பாடில்லை.
ஆனால் மக்கள் மாறிவிட்டார்கள்….கடந்த முறை அகில இந்திய அளவில் நீட் தேர்வில் முதலிடம் பெற்றது என்னவோ தமிழக மாணவர் தான்,. ஆனால் திமுக எதிர்க்கட்சியாக இருந்தபோது, நீட் தேர்வை ஒழித்து விடுவோம் ஒழித்து விடுவோம் என்று கூறிய பொய் வாக்குறுதிகளை நம்பி வாழ்க்கையை தொலைத்த மாணவர்களின் நிலையைப் பற்றி இவர்களுக்கு கொஞ்சமாவது வருத்தம் இருக்கிறதா ??
எங்களால் நீட் தேர்வு ஒழிக்க முடியவில்லை.. நாங்கள் தோல்வியடைந்து விட்டோம் என்று பகிரங்கமாக ஒப்புக்கொண்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க திராணி இருக்கிறதா திமுகவிற்குஇன்னும் எவ்வளவு நாள் இதை வைத்துக்கொண்டு அரசியல் செய்வார்கள் என்பதையும் பார்ப்போம் !!