மு.க ஸ்டாலின் பிறந்த நாளில் வச்சு செய்த நெட்டிசன்கள் #ஹாப்பி பர்த் டே இலவுகாத்த கிளி

தி.மு.க தலைவர் ஸ்டாலின் பிறந்தநாள் இன்று மார்ச் 1 ஆம் தேதி. ஸ்டாலினின் பிறந்தநாளையொட்டி ஹாப்பி பர்த்டே இலவுகாத்த கிளி என்ற ஹாஷ்டேக்கை சமூக வலைதளவாசிகள் ட்விட்டரில் டிரெண்டாக்கி வருகின்றனர். தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தனது பிறந்தநாளை இன்று கொண்டாடி வருகிறார். மவ்வ்ட்மட்டோரும் திமுகவினர் கொண்டாடி வருகின்றார்கள். ஆனால் அது பெரிய அளவில் கொண்டாடவில்லை என்பதே உண்மையான நிலவரம். எடுக்கும் முடிவுகள் அனைத்தும் தோல்வியில் முடிகிறது .

இந்துக்கள் இல்லாமல் ஆட்சி பிடித்து விடலாம் என்று எண்ணி தொடர்ந்து இந்துக்களை புண்படுத்தி வருகிறார். இந்த நிலையில், ட்விட்டரில் ஸ்டாலினின் முதலமைச்சர் கனவை விமர்சித்து பலரும் பதிவிட்டு வருகின்றனர். இதற்காக ஹாப்பி பர்த் டே இலவுகாத்த கிளி என்ற ஹாஷ்டேக்கை உருவாக்கிய இணையதள வாசிகள் அதனை இந்திய அளவில் டிரெண்டாக்கி வருகின்றனர்.

ஸ்டாலின் முதலமைச்சர் கனவு நிறைவேறப் போவதில்லை என்பதை மறைமுகமாக குறிப்பிடும் வகையில் ஹாப்பி பர்த் டே இலவுகாத்த கிளி என்ற ஹாஷ்டேக்கில் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

FacebookTwitterWhatsAppMessengerTelegramWeChatLineShare
Exit mobile version