”டிசம்பர் இறுதியில் கர்நாடக அரசியலில் பெரும் அரசியல் திருப்புமுனை ஏற்படும். பல காங்கிரஸ் தலைவர்கள் பா.ஜ.,வில் இணைய ஒற்றைக்காலில் நிற்கின்றனர்,” என பா.ஜ., தேசிய பொது செயலர் சி.டி.ரவி தெரிவித்தார்.சமீப காலமாக காங்கிரஸ் மூத்த தலைவர்கள் அக்கட்சியில் இருந்து விலகி பா.ஜ.,வில் ஐக்கியமாகின்றனர்
.இது குறித்து, பா.ஜ., தேசிய பொது செயலர் சி.டி.ரவி, ஹுப்பள்ளியில் நேற்று கூறியதாவது:நீதி, நேர்மை, தலைமை ஆகிய மூன்றும் இல்லாத எந்த கட்சியும் பிரபஞ்சத்தில் இருக்க வாய்ப்பில்லை. அத்தகைய சூழ்நிலை தான் காங்கிரசுக்கு ஏற்பட்டுள்ளது.நாட்டு நலன், மக்கள் நலன் மீது அக்கறை இல்லாததே அக்கட்சியின் அழிவுக்கு காரணம். அக்கட்சியின் இளைய மற்றும் மூத்த தலைவர்கள் பா.ஜ., தொடர்பில் உள்ளனர்.
டிசம்பர் இறுதியில் கர்நாடக அரசியலில் பெரும் அரசியல் திருப்புமுனை ஏற்படும். பல காங்கிரஸ் தலைவர்கள் பா.ஜ.,வில் இணை ஒற்றைக்காலில் நிற்கின்றனர்.எடியூரப்பாவை யாரும் கேள்வி கேட்க முடியாத தலைவர். அவரை யாராலும் கட்டி போட முடியாது. பா.ஜ.,வை உச்சத்துக்கு வளர்த்த தலைவர். விரைவில் மாநில சுற்றுப்பயணம் மேற்கொள்வார்.இவ்வாறு அவர் கூறினார்.
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















