அமலாக்கத்துறையின் அடுத்த டார்கெட் பத்திரப்பதிவுத் துறை அமைச்சர் மூர்த்தி தான் என கூறியுள்ள தமிழக பா.ஜ.க தலைவர் கூறியுள்ளதால் அறிவாலயம் சற்று ஆட்டம் கண்டுள்ளதாம்.
தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அவர்கள் தமிழகம் முழுவதும் என் மண் என் மக்கள் என்ற பாதயாத்திரை மூலம் தமிழகம் முழுவதும்மக்களை சந்தித்து வருகிறார். அண்ணாமலையின் இந்த பாதயாத்திரையை ஆரவாரமாக கொண்டாடி வருகிறார்கள் தமிழக பாஜகவினர். மேலும் மக்களின் ஆதரவு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில் பத்திரப் பதிவுத்துறையில் மிகப்பெரிய ஊழல் நடந்து வருவதாக குற்றம்சாட்டி வருகிறார். சில தினங்களுக்கு முன்பு பேசிய அண்ணாமலை, “பத்திரப்பதிவுத் துறை அமைச்சராக இருக்கும் மூர்த்தி, விஞ்ஞான ரீதியில் ஊழல் செய்து வருகிறார். அவரது மகள் திருமணத்திற்கு செய்திருக்கும் செலவில், ஒரு சர்க்கரை ஆலையையே அமைத்துவிடலாம். அமலாக்கத்துறையின் அடுத்த டார்கெட் அமைச்சர் மூர்த்தியாகவும் இருக்கலாம்” எனக் கூறினார்.
இதற்கு முன் செந்தில் பாலாஜி கைது அமலாக்கதுறையினால் கைது செய்யப்படுவார் என அண்ணாமலை கூறினார் அதுபோல் நடந்து விட்டது. தற்போது செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையின் பிடியில் உள்ளார்.
அதே சமயம் உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி வீடு மற்றும் அவரது மகனும் பாராளுமன்ற உறுப்பினருமான கவுதம் சிகாமணி , அலுவலகம் என அமலாக்கத்துறை அதிரடி சோதனைகளை மேற்கொண்டு பல ஆவணங்களை கொண்டு சென்றுள்ளது. , பொன்முடியின் பல கோடிக்கணக்கான சொத்துக்கள் முடக்கப்பட்டிருக்கின்றன. அவர் மீதான விசாரணை நடந்து கொண்டிருக்கிறது.
இந்த நிலையில் அண்ணாமலை கூறியது நடந்துவிடுமோ என்ற அச்சத்தில் அறிவாலயம் உள்ளது. மேலும் தமிழகம் முழுவதும் நடந்துள்ள பத்திரப்பதிவுகளை மறைமுகமாக ஆய்வு செய்யவும் முடிவெடுத்துள்ளார்களாம். அனைத்து அமைச்சர்களின் நடவடிக்கையை கண்காணிக்க உத்தரவிட்டுள்ளதாம் அமலாக்கத்துறை.
மேலும் அமலாக்கத்துறையினர் வெளிநாடுகளுக்கு செல்லும் தமிழக அமைச்சர்கள் அவரின் உறவினர்களையும் கண்காணிப்பு வளையத்திற்குள் வைத்துள்ளது. செந்தில் பாலாஜியின் தம்பியை விட்டு பிடித்துள்ளது. அவர் எங்கு சென்றார் யாரை பார்த்தார், என அனைத்து விவரங்களையும் சேர்த்து வைத்துள்ளார்களாம். இந்த செய்தி அறிவாலயத்தில் புயலை கிளப்பி உள்ளது.