ஒட்டுமொத்த உலகத்தையும் ஆட்டி படைத்து வருகிறது கொரோனோ எனும் கொடிய நோய். இந்த நிலையில் இந்தியாவிலும் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இது வரி 15 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் இந்த நோயினால் பாதிப்புக்குள்ளானார்கள் 506 பேர் உயிர் இழந்துள்ளார்.
கொரோனாவின் தாக்கத்திற்கு ‘ஹைட்ராக்சிக்ளோரோக்வின்’ எனும் மாத்திரை பலன் அளிப்பதாக தகவல்கள் வெளிவந்தது. இந்த மாத்திரைகள் இந்தியாவில் அதிக அளவில் ஹைட்ராக்சிக்ளோரோக்வின்’ மாத்திரைகள் தயாரிக்கப்படுகின்றது.
இதனை தொடர்ந்து அமெரிக்க பிரிட்டன் இலங்கை என அனைத்து நாடுகளும் இந்தியவை அணுகின. மனிதாபிமான அடிப்படையில் இந்தியா அனைத்து நாடுகளுக்கும் மருத்துவ உதவி செய்தது இந்தியா. இந்த நிலையில் கஜகஸ்தானுக்கு மருத்துவ பொருட்களை அனுப்பிய இந்தியாவுக்கும், பிரதமர் மோடிக்கும் அந்நாட்டு அதிபர் ‘நட்பின் உச்சம்’ என நன்றியை வெளிப்படுத்தி உள்ளார். மருத்துவ பொருட்களை அனுப்பி வைத்ததற்காக, இந்தியாவுக்கும், பிரதமர் மோடிக்கும் கஜகஸ்தான் அதிபர் காசிம் ஜோமார்ட் டோகாயேவ் நன்றி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் டுவிட்டரில் பதிவிட்டதாவது: கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்த, கஜகஸ்தானுக்கு மருத்துவப் பொருட்களை நன்கொடையாக வழங்கியதற்காக, இந்திய அரசுக்கும் தனிப்பட்ட முறையில் பிரதமர் மோடிக்கும் மனமார்ந்த நன்றி. இது நட்பு, ஒற்றுமையின் உச்சம். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.