வானதி என்னும் பீனிக்ஸ் பறவை! கடுஞ்சொற்கள்” என்னும் “கற்களை” வீசித் தாக்கினாலும், படிக்கற்களாக மற்றிக் கொண்டு, வளரும், பீனிக்ஸ் பறவை!

வானதி சீனிவாசன் அவர்கள் கடந்த வாரம் கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற அலுவலகத்தினை திறந்து திறந்தார். முறைப்படி கணபதி ஹோமம் மற்றும் பூஜைகள் செய்து அலுவலகத்தினை திறந்தார், மேலும் அவர் பிள்ளையார் சுழி தன லாபம் என சுவற்றில் மஞ்சளில் எழுதப்பட்டிருந்தது. இது வழக்கமான ஒன்றுதான், அதை எந்த அலுவலகம் திறந்தாலும் இவ்வாறு எழுதப்பட்டிருக்கும். அதே போல் பூஜை செய்தவர்கள் எழுதிவிட்டார்கள்.

எதார்த்தமாக நடந்த இந்த விஷயத்தினை பூதாகரமாக மாற்றப்பட்டது ஊடகங்களால். ஊடகங்கள் எழுதுவது இயல்பு என்றாலும் பா.ஜ.க ஆதரவாளர்கள் இந்த விஷயத்தினை பெரிதாக்கினார்கள் என்பது தான் ஹைலைட். எஸ்.வி சேகர் போன்றோர் வானதி சீனிவாசனை விமர்சித்தர்கள்.

இதுகுறித்து வானதி சீனிவாசனின் ஆதரவாளர் வெள்ளலூர். சிவஞான ஜம்புலிங்கம் கூறியபோது:

தான லாபம் அலுவலகத் திறப்பு விழாவன்று, அலுவலகச் சுவரில் “தனம் ,லாபம்” என்று, மஞ்சள் கரைத்து மங்களகரமாக, நன்னிமித்தமாக, மரபு சார்ந்து எழுதப்பட்டதை ,பாஜகவினர் சிலர் எதிர்மறையாகக் கண்டு விமர்சித்திருப்பது எம் போன்றறோர் நெஞ்சில் பெரும் காயத்தை உண்டாக்கி பெருவலியைக் கொடுத்துள்ளது

“லாபம்-தனம்” என்னும் சொற்களுக்குள் நேர்மறை சக்தி பொதிந்துள்ளது. வளர்ச்சிப் பாதையில் வழிநடத்திச் செல்லும், ஊக்கம் மிகுந்த,ஊட்டச் சொற்கள் இவை. இச்சொற்கள் ஏதோ வானதி சொத்து சேர்ப்பதற்காக, பணம் சம்பாதிப்பதற்காக எழுதப்பட்ட மந்திரச் சொற்களாகப் பார்க்கின்றனர்.

அவர் ஏற்கனவே தன் அயராத, கடின உழைப்பால், நிறைசெல்வதைப் பெற்றவர். வறியவர்க்கு வாரி வழங்கி வருபவர். இவ்வலுவலகத்திற்கு வந்து செல்லும் மக்களின் குறை தீர்த்து, செல்வ வளத்துடன் வாழவேண்டும், எல்லாரும் எல்லாமும் பெறவேண்டும் என்னும், மேலோங்கிய எண்ணத்துடன் எழுதப்பட்டதே இச்சொற்கள். சொத்து சேர்கும் கறுப்புமனம் இங்கில்லை.

நேர்மை, ஒழுக்கம், சுய கட்டுப்பாடு, தீயவைகண்டு அஞ்சுவது என்னும் நிறைகுணங்களால் முழுமை பெற்றுத் திகழ்பவர் எங்கள் வானதி தெளிவான திட்டங்களையும், நெகிழ்வான அணுகு முறைகளையும் வகுத்துக் கொண்டு, செயலாற்றும் நேர்மையான சட்டமன்ற உறுப்பினர் எங்கள் வானதி

இவர் ஒரு சாதனை நட்சத்திரம்.அக்கறை மிகுந்த சமூக செயற்பாட்டாளர். சாமானியர்களின் நலனுக்காகவே தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர். எத்தனை “கடுஞ்சொற்கள்” என்னும் “கற்களை” வீசித் தாக்கினாலும், அக்கற்களையே, தன் முன்னேற்றத்திற்ககான, படிக்கற்களாக மற்றிக் கொண்டு, வளரும், மனதிடம் மிக்க ஃபீனிக்ஸ் பறவை எங்கள் வானதி

நல்லோர் மனதை நோகடிக்கும் “கொடிய பொறாமை”என்னும் “ஒலிம்பிக் போட்டியில்” கலந்துகொண்டு விளையாடுவதை,திருவிளையாடல் செய்வதை, தயவுசெய்து நிறுத்திக் கொள்ளுங்கள் நண்பர்களே.

நண்பர்களே! வானதி உங்கள் சகோதரி! வானதி நம்ம வீட்டு பொண்ணு! She is a statewide immaculate honest politician. Beware the fury of the honest Vaanathi. என தனது கருத்துக்களை பதிவிட்டுள்ளார்.

Exit mobile version