டெல்லி-குருகிராம் நெடுஞ்சாலையில் நேற்று இரவு சாலையில் மேம்பாலத்தின் அடியில் ஏர் இந்தியா விமானம் ஒன்று சிக்கி கொண்டது. இது தொடர்பான வீடியோ சமூகவலைத்தளங்களில் காட்டு தீ போல் வேகமாக பரவியது.
டெல்லி விமான நிலையத்திற்கு வெளியே டெல்லி-குருகிராம் நெடுஞ்சாலையில் ஒரு நடைமேம்பாலத்தின் அடியில் ஏர் இந்தியா விமானம் சிக்கிக் கொண்டது. விமானம் அங்கு எப்படி வந்தது என்பது குறித்து மக்கள் குழப்பமும் அச்சமும் அடைந்தார்கள்.
பின் அங்கு காவல் துறை விரைந்தது. விசாரணை மேற்கொண்டது அந்த விமானம் இது ஒரு பழைய விமானம் என்று தெரியவந்தது. பின்னர், ஏர் இந்தியாவால் விற்கபட்டுள்ளது. இந்த விமானத்தினை வாங்கியவர் கொண்டு செல்லும் போது மாட்டி கொண்டதாக தெரிய வந்துள்ளது.
வீடியோவில், வாகனங்கள் நெடுஞ்சாலையின் ஒரு பக்கத்தின் வழியாக கடந்து செல்வதைக் காணலாம், அதே நேரத்தில் மறுபுறம் மேம்பாலத்தின் அடியில் சிக்கிக்கொண்டு நிற்கிறது. விமானத்தின் முன்பக்கம் மற்றும் அதன் மேல் பாதி சிக்கிக் கொள்ளும் முன் நடைமேம்பாலத்தின் அடியில் கடந்து விட்டது.
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















