சென்ற ஆண்டுடன் ஒப்பிடுகையில், நாட்டில் இந்த ஆண்டு நெல் 47.60 லட்சம் ஹெக்டேர் அதிக
நிலப்பரப்பிலும், எண்ணெய் வித்துக்கள் 24.33 லட்சம் ஹெக்டேர் அதிக நிலப்பரப்பிலும்
பயிரிடப்பட்டுள்ளன.
கோவிட்19 பெருந்தொற்று காலத்தில் கள அளவில் வேளாண் செயல்பாடுகளுக்கும், உழவர்களுக்கும், உதவும்
வகையிலான பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசின் வேளாண்மை, கூட்டுறவு, விவசாயிகள் நலன்
ஆகியவற்றுக்கான துறை எடுத்து வருகிறது. கரீப் பருவ பயிர்களில் விதைப்புப் பரப்பளவு திருப்திகரமான
முன்னேற்றத்தை அளித்துள்ளது. விவரங்கள் பின்வருமாறு:
அரிசி: இந்த ஆண்டு சுமார் 321.79 லட்சம் ஹெக்டேர் நிலப்பரப்பில் விதைக்கப்பட்டுள்ளது. சென்ற ஆண்டு இதே
காலத்தில் விதைக்கப்பட்ட நிலப்பரப்பின் அளவு 274.19 லட்சம் ஹெக்டேர். சென்ற ஆண்டுடன் ஒப்பிடுகையில்,
இது 47.60 லட்சம் ஹெக்டேர் அதிக நிலப்பரப்பாகும்.
பருப்பு வகைகள்: சுமார் 119.59 லட்சம் ஹெக்டேர் நிலப்பரப்பில் பயிரிடப்பட்டுள்ளது. சென்ற ஆண்டு இதே
காலத்தில் 114.77லட்சம் ஹெக்டேர் நிலப்பரப்பில் பயிரிடப்பட்டது. சென்ற ஆண்டுடன் ஒப்பிடுகையில், இது 4.82
லட்சம் ஹெக்டேர் அதிக நிலப்பரப்பாகும்.
மோட்டா தானியங்கள் சுமார் 160.43லட்சம் ஹெக்டேர் நிலப்பரப்பில் பயிரிடப்பட்டுள்ளது. சென்ற ஆண்டு இதே
காலத்தில் 154.77 லட்சம் ஹெக்டேர் நிலப்பரப்பில் பயிரிடப்பட்டது. சென்ற ஆண்டுடன் ஒப்பிடுகையில், இது 5.66
லட்சம் ஹெக்டேர் அதிக நிலப்பரப்பாகும்.
எண்ணெய் வித்துக்கள்: சுமார் 181.07லட்சம் ஹெக்டேர் நிலப்பரப்பில் பயிரிடப்பட்டுள்ளது. சென்ற ஆண்டு இதே
காலத்தில் 156.75லட்சம் ஹெக்டேர் நிலப்பரப்பில் பயிரிடப்பட்டது. சென்ற ஆண்டுடன் ஒப்பிடுகையில், இது
24.33 லட்சம் ஹெக்டேர் அதிக நிலப்பரப்பாகும்.
கரும்பு: சுமார் 51.95லட்சம் ஹெக்டேர் நிலப்பரப்பில் பயிரிடப்பட்டுள்ளது. சென்ற ஆண்டு இதே காலத்தில் 51.33
லட்சம் ஹெக்டேர் நிலப்பரப்பில் பயிரிடப்பட்டது. சென்ற ஆண்டுடன் ஒப்பிடுகையில், இது 0.62 லட்சம்
ஹெக்டேர் அதிக நிலப்பரப்பாகும்.
சணல் பயிர் மற்றும் மேஸ்தா: சுமார் 6.95 லட்சம் ஹெக்டேர் நிலப்பரப்பில் பயிரிடப்பட்டுள்ளது. சென்ற ஆண்டு
இதே காலத்தில் 6.85லட்சம் ஹெக்டேர் நிலப்பரப்பில் பயிரிடப்பட்டது. சென்ற ஆண்டுடன் ஒப்பிடுகையில், இது
0.10 லட்சம் ஹெக்டேர் அதிக நிலப்பரப்பாகும்.
பருத்தி: சுமார் 123.64லட்சம் ஹெக்டேர் நிலப்பரப்பில் பயிரிடப்பட்டுள்ளது. சென்ற ஆண்டு இதே காலத்தில்
118.73லட்சம் ஹெக்டேர் நிலப்பரப்பில் பயிரிடப்பட்டது. சென்ற ஆண்டுடன் ஒப்பிடுகையில், இது 4.90 லட்சம்
ஹெக்டேர் அதிக நிலப்பரப்பாகும்.
06.08.2020 அன்றைய நிலவரப்படி நாட்டில் பெய்த மொத்த மழையளவு 505.7 மில்லிமீட்டர். 1.6.2020 முதல்
3.7.2020 வரையிலான காலத்தில் சாதாரணமாக பொதுவான மழையளவு 507.3 மில்லி மீட்டர். நாட்டில் பல்வேறு
பகுதிகளில் உள்ள 123 நீர்த்தேக்கங்களில் மொத்த நீர் இருப்பு, சென்ற ஆண்டு இதே காலத்தில் இருந்த
அளவின்108 சதவிகிதமாக உள்ளது என்றும், கடந்த பத்து ஆண்டு கால சராசரி இருப்பின் 94 சதவிகிதமாக
உள்ளது என்றும் மத்திய நீர் ஆணையம் தெரிவித்துள்ளது. இதன் மூலம் விவசாயம் பெறுகிறது .. விவசாய்களுக்கு மத்திய அரசின் நல திட்டங்கள் அதிக அளவில் சென்றடைவதால் விவாசாயிகள் மகிழ்ச்சியுடன் விவசாயம் செய்து வருகிறார்கள். மேலேயும் பிரதமர் நரேந்திர மோடியின் கனவு நினைவாகிறது.
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















