பாரதம் என மாற்றிய மத்திய அரசு! ஜி20 மாநாட்டிற்கு ”பாரத குடியரசு தலைவர்” என அச்சிட்ட அழைப்பிதழ்!
ஜி 20 மாநாட்டில் பங்கேற்கும் விருந்தினர்களுக்கு கொடுக்கப்பட்ட அழைப்பிதழில் என்பதற்கு பதில் பாரத குடியரசுதலைவர் என அச்சிடப்பட்டு உள்ளது.
ஜி20 உச்சி மாநாடு:
உலக பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கும் 20 நாடுகள் சேர்ந்த ஜி20 அமைப்பிற்கு, நடப்பாண்டு இந்தியா தலைமை தாங்குகிறது. அதன் ஒரு பகுதியாக வரும் 9 மற்றும் 10ம் தேதிகளில் டெல்லியில் ஜி20 உச்சி மாநாடு நடைபெற உள்ளது. இதற்காக வழங்கப்பட்டுள்ள அழைப்பிதழில் பாரத குடியரசுதலைவர்
என குறிப்பிடப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.ம்
பாரத் குடியரசுதலைவர்:
அரசு சம்பந்தமான அழைப்பிதழ்களில் வழக்கமாக குறிப்பிடப்படும் இந்திய குடியரசு தலைவர் என்பதற்கு பதில் பாரத் குடியரசுதலைவர் என அச்சிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் பாரத் குடியரசு என குறிப்பிட்டு அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா ட்விட்டரில் பதிவிட்டுள்ளார் . “நமது நாகரீகம் அமுத காலத்தை நோக்கி முன்னேறி வருவதில் மகிழ்ச்சி பெருமிதம் கொள்கிறது” என்றும் அசாம் முதல்வர் குறிப்பிட்டுள்ளார்.