நாட்டை கத்தி முனையில் பிடித்து வைத்து கந்துவட்டி கறந்து அந்நாட்டை தன் அங்கீகரிக்கபடாத மாநிலமாக ஆக்கிவைத்திருக்கின்றது சீனா, இது அரசுகளுக்குள்ள ஒப்பந்தம்ஆனால் மக்களை இந்திய எதிர்ப்பு உள்ளிட்ட பலவற்றை செய்து குழப்பி ஒருமாதிரி வைத்திருகின்றது அந்நாட்டு அரசு
இந்நிலையில் தாலிபன்களுக்கு பாகிஸ்தானில் ஆதரவு பெருகுகின்றது, உண்மையில் அடுத்த ஆப்கனாக பாகிஸ்தான் மாறி கொண்டிருக்கின்றதுஇப்பொழுது தாலிபன்களுக்கு ரகசிய உதவி செய்துகொண்டிருக்கும் பாகிஸ்தான் அரசு அதை பகிரங்கமாக சொல்லமுடியவில்லை என்றாலும் தாலிபன் பாகிஸ்தான் உறவு வீரமணிக்கும் திமுகவுக்குமானது போன்றது என்பது எல்லோரும் அறிந்தது
இது சர்வதேச அரங்கில் பாகிஸ்தானுக்கு சிக்கலை ஏற்படுத்திய நிலையில் நேற்று முன் தினம் அமெரிக்க பி52 விமானம் பாகிஸ்தான் வான்வெளி ஊடாக பறந்து தாலிபான்களை தாக்கியது அங்கு கொந்தளிப்பினை ஏற்படுத்தியிருகின்றது
கத்தாரில் இருந்துதான் அமெரிக்க ராட்சத விமானம் பாகிஸ்தான் ஊடாக சென்றது தாலிபன்களை தாக்க அமெரிக்க விமானங்களை தங்கள் நாட்டின் ஊடாக அனுமதிக்க கூடாது என பாராளுமன்றத்தில் போர்குரல் எழுப்புகின்றன எதிர்கட்சிகள் அமெரிக்கா இந்த வான்வழி மற்றும் நிலவழிக்காக பாகிஸ்தானுடன் ஒப்பந்தம் செய்து பலம்.
மில்லியன் டாலர் கொட்டியிருப்பதும் வரலாறு இதனால் அமெரிக்காவினை தடுக்க முடியாமலும், அதே நேரம் மக்களின் பெரும் கோபத்தை கட்டுபடுத்த முடியாமலும் தவிக்கின்றது பாகிஸ்தான் அரசு தாலிபன்களின் தேசம் ஆப்கன் மட்டுமல்ல பாகிஸ்தானும் அவர்களின் குறி என்பது மெல்ல மெல்ல தெரிகின்றது. மிக பெரிய அபாயம் அங்கே உருவெடுத்திருகின்றது.
இன்று தாலிபன்களை இவ்வளவு பகிரங்கமாக ஆதரிக்கும் பாகிஸ்தானியர் நாளை அவர்களின் கொள்கைகளை ஏற்று முழு தாலிப பாகிஸ்தானியராக மாற அதிக அவகாசம் எடுக்காது ஆக ஒரு தாலிபான் ஆடிகொண்டிருக்கின்றது,
இன்னொரு தாலிபன் தேசம் உருவாகி கொண்டிருக்கின்றது. இது பாகிஸ்தானின் ஸ்திர தன்மைக்கே மிக பெரும் ஆபத்து “தன் வினை தன்னை சுடும் , தாலிபன் தன்னை உருவாக்கியவனையே சுடும்” என்பது பாகிஸதான் விஷயத்தில் நன்றாக தெரிகிறது.
எழுத்தாளர்: ஸ்டான்லி ராஜன்