இந்து அறநிலைய துறை அமைச்சர் சேகர் பாபு அவர்கள் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது :
கோவில்களில் தமிழில் அர்ச்சனை செய்யப்பட்டு வருகிறது. தமிழில் அர்ச்சனை செய்வதற்கான பயிற்சி, அர்ச்சகர்களுக்கு ஏற்கனவே தரப்பட்டுள்ளது
அனைத்து ஜாதியினரும், 100 நாட்களுக்குப் பின் அர்ச்சகர்களாக நியமிக்கப்பட்டிருப்பர். அவர்களுக்கு மீண்டும் பயிற்சி அளிக்கப்படும்.பெண்கள் விரும்பினால், அவர்களுக்கும் பயிற்சி அளித்து, அர்ச்சகர்களாக்கும் முயற்சியில் ஈடுபடுவோம். என தெரிவித்தார்.
இதற்கு பதிலளிக்கும் விதமாக கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் அவர்கள் தனது சமூக வலைதள பக்கத்தில் விஷ்வ ஹிந்து பரிஷத் பல்லாண்டுகளாக அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் பயிற்சி அளித்துக்கொண்டுள்ளது. ஆர்.எஸ்.எஸ்.அமைப்பு முழுமையாக இப்பணியில் துணை நிற்கிறது.
பெண்களுக்கு அர்ச்சகர் பயிற்சி வழங்கப்படும் என்பது வரவேற்கத்தக்கது. பெண்கள் அர்ச்சகராக மேல்மருவத்தூர் போன்ற பல்வேறு கோயில்களில் சேவையாற்றிக் கொண்டுள்ளனர்.கோவை பேரூர் ஆதீனம் போன்ற பழமையான ஆதீனங்கள் பெண்களுக்கு ஆன்மீக பயிற்சி அளித்து கோயில் நிகழ்வுகளை நடத்த ஊக்கமளிக்கிறார்கள்.
ஹிந்து மரபில் பெண்களுக்கான ஆன்மீக தளம் பெருமளவு அனுசரணை கொண்டது. காரைக்காலம்மையார் பெயரில் பயிற்சிப் பள்ளி துவங்கவேண்டும். கோயில் நிர்வாகம்& பக்தர்கள் ஒத்துழைப்பு , முறையான பயிற்சி என ஆக்கப்பூர்வமாக முன்னெடுக்க வேண்டும்.தீண்டாமை ஒழிப்பை வெற்று முழக்கமல்லாது வாழ்க்கை முறையாகக் கொண்டது சங்க குடும்பம் என பதிலளித்துள்ளார்.