இந்தியாவின் அதிநவீன சூப்பர் சோனிக் பிரம்மோஸ் ஏவுகணை: நீண்ட தூர இலக்கை தொட்டு சாதனை.!
பிரதமர் மோடி வெளிநாடுகளின் உதவி இல்லாமல் நாமே இந்தியா அனைத்தையும் தயாரிக்க வேண்டும் என்ற எண்ணத்தில், ஆத்மநிர்பார் பாரத் அபியான் திட்டத்தை அறிவித்துள்ளார். இதன்படி இந்தியாவில் உள்ள ஒவ்வொரு உற்பத்தி துறையும் சுயசார்பு முயற்சிகளை எடுத்து வருகின்றன.
அந்த அடிப்படையில் இந்தியா தனது கடற்படைக்காக பிரத்தியேகமாக பிரம்மோஸ் சூப்பர்சோனிக் ஏவுகணை ஒன்றை சொந்த நுட்பத்தில் உருவாக்கியது. இந்த ஏவுகணையை சென்ற செப்டம்பர் 30 ஆம் நாள் வெற்றிகரமாக சோதனை செய்தது.
ஏவுகணை 400 கி.மீ.’க்கு தொலைவுக்கு மேல் உள்ள இலக்குகளை தாக்கும் திறன் கொண்டது என்பது இதன் மூலம் நிரூபிக்கப்பட்டது.
பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்
இது குறித்து அவர் தனது பதிவில்:-
”பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பிற்கு வாழ்த்துகள். உள்நாட்டு உற்பத்தி பொருட்கள் பயன்படுத்தப்பட்ட சூப்பர் சோனிக் ஏவுகணையின் வெற்றி மேலும் ஒரு மைல் கல்” என்று அவர் பதிவிட்டுள்ளார்.