கடந்த 2001ஆம் ஆண்டு, தலிபான் தீவிரவாதிகளின் ஆட்டம் உலகம் முழுவதும் பரவி இருந்தது. ஆப்கனில் தான் அது மையம் கொண்டது. அமெரிக்கா தலைமையிலான பாதுகாப்புப் படையினரால் ஆஃப்கானிஸ்தானின் அதிகாரத்தில் இருந்து தாலிபன்கள் அகற்றப்பட்டனர். தீவிரவாதிகளை களையெடுக்கவும் ஆப்கானிஸ்தானில் அமைதி நிலையினை நிலைநாட்ட உலக நாடுகள் விரும்பியது. அதே போல் அங்கு அமைதி திரும்பி கொண்டிருந்தது.
ஆப்கானில் அமெரிக்காவின் படைகள் நிலை கொண்டிருக்கும் இருந்து அமெரிக்கப் படைகளை ஆகஸ்ட் மாதம் 31ம் தேதிக்குள் முழுமையாக திரும்ப பெற்றுவிடும் என கடந்த வாரம் அமெரிகக் அதிபர் ஜோ பைடன் அறிவித்தார். அமெரிக்கா வரும் செப்டம்பர் 11ஆம் தேதிக்குள், கடந்த இருபது ஆண்டுகளாக ஆப்கானிஸ்தானில் நிலை நிறுத்தி இருக்கும் அமெரிக்க படைகளை முழுமையாக பபின்வாங்குவதாக தெரிவித்தார். அமெரிக்க அதிபர் ஜோ பைடன். கடந்த 2018ஆம் ஆண்டு தாலிபன் குழுக்கள் அமெரிக்கா உடன் நேரடியாக பேச்சு வார்த்தையில் ஈடுபட்டது. கடந்த பிப்ரவரி 2020-ல் இரு தரப்பும் தோஹாவில் ஒரு அமைதி உடன்படிக்கை எட்டப்பட்டது.
ஏற்கெனவே 90% அமெரிக்கப்படைகள் நாடு திரும்பிவிட்டனர். இந்நிலையில் அமெரிக்கப்படைகள் திரும்ப பெறப்பட்ட பகுதிகளில் தாலிபான் தீவிரவாதிகளின் ஆதிக்கம் அதிகரித்துள்ளது. ஆப்கானிஸ்தானை முழுமையாக கைப்பற்ற வேண்டும் என்ற நோக்கத்திலேயே தாலிபான் தீவிரவாதிகள்அமைப்பு செயல்பட்டு வருவது குறிப்படத்தக்கது.
ஆப்கானிஸ்தானில் தற்போது தாலிபான் தீவிரவாதிகள் பயங்கர தாக்குதல் நடத்தி வருகின்றனர். பல இடங்களை கைப்பற்றிவிட்டார்கள் என மார்தட்டி வருகிறார்கள். அமெரிக்காவின் நடவடிக்கை உலக நாடுகள் இடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. மீண்டும் தீவிரவாதம் தலை தூக்குவதற்கு அமெரிக்க விதை போட்டுவிட்டது என்ற எண்ணம் மேலோங்கியுள்ளது. இது உலக அமைதிக்கு அச்சுறுத்தல் விளைவிப்பதாக பல நாடுகள் கருத்து தெரிவித்து வருகின்றனர். ஆப்கானிஸ்தான் அரசு மற்றும் அமெரிக்கப் படைகள் ஆகியவற்றை எதிர்த்து பயங்கரவாதிகள் வெடிகுண்டுத் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
தாலிபான்களுக்கு ஆதரவாக இருந்த ஆப்கானில் முகாமிட்டிருந்த 112 சீனர்களை தனிவிமானம் மூலமாக தங்கள் நாட்டுக்கு சீன கம்யூனிச அரசு அழைத்துக்கொண்டது. இது தாலிபான் அமைப்பினை அதிர்ச்சி அடையச்செய்தது. ஆப்கானிஸ்தானும் சீனாவும் தனக்கு எதிராக உள்ளன என்று பத்திரிகையாளர் சந்திப்பில் தாலிபான் அமைப்பின் செய்தி தொடர்பாளர் சுகைல் ஷகிங் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து சீனாவின் ஜின் ஜியாங் மாகாணத்தில் இருந்து உய்குர் பழங்குடி இன மக்கள் உரிமைக்காக போராடும் ஆயுதமேந்திய போராளிகளுக்கு ஆப்கானிஸ்தானில் நுழைய தாலிபான்கள் தடை விதிக்க உள்ளதாகத் தெரிவித்துள்ளது. இது சீனாவை அதிருப்தி அடையச் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.