ஒரு தேசத்தில் சில தீவிரவாதிகள் இருந்தாலே அது உலகத்துக்கு மாபெரும் அச்சுறுத்தலாக மாறும். ஒரு தேசத்தையே தீவிரவாத அமைப்பு ஒன்று ஆட்சி செய்தால் உலகம் என்ன ஆகும் என்பதற்குப் பாடம்
ஆப்கானிஸ்தான்.
வெறும் ஐந்து ஆண்டுகள்தான் அவர்கள் ஆப்கானிஸ்தானை ஆட்சி செய்தனர். ஆனால், ஆப்கன் மக்களுக்கும் உலகத்துக்கும் அது கொடுந்துயர் காலமாக இருந்தது. முன்னேற்றத்திற்கான எல்லா விஷயங்களையும் மதத்தின் பெயரால் தடை செய்து அந்நாட்டை பின்னோக்கிச் செலுத்தியது அந்த ஆட்சி.
இனி தாலிபன்கள் ஆப்கனை இரண்டாயிரம் ஆண்டுகள் பின்னோக்கி நகர்த்திச் செல்லக்கூடும்.
உலகின் மிக வல்லமை பொருந்திய அமெரிக்க ராணுவம் மீண்டும் ஒரு தோல்வியை சந்தித்திருக்கிறது.
ஆப்கானிஸ்தான் மண்ணில் அல்-கொய்தா அமைப்புக்கோ, ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கோ புகலிடம் தர மாட்டோம்” என தாலிபன் அமைப்பு கொடுத்த ஒற்றை உறுதிமொழியை மட்டும் எடுத்துக்கொண்டு அமெரிக்கப் படைகள் வெளியேறியுள்ளன.
இந்த நிலையில் அமெரிக்காவின் ராணுவ ஹெலிகாப்டரின் அமெரிக்க அதிகாரிகளுக்கு மொழிபெயர்ப்பாளராக பணியாற்றிய ஆப்கன் நபரின் உடலை தொங்கவிட்டு தலிபான்கள் ரோந்து நடத்திய சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ஆப்கானிஸ்தானில் ஆட்சி, அதிகாரத்தை கைப்பற்றிய தலிபான்கள் நாளுக்கு நாள் செய்யும் அட்டூழியத்திற்கு அளவில்லாமல் உள்ளன. அங்குள்ள மக்கள் ஒவ்வொரு நாளும் தங்கள் உயிரை கையில் பிடித்து வாழ வேண்டிய நிலை உருவாகியுள்ளது.
இந்த நிலையில் அமெரிக்கா நாடு விட்டு சென்ற ராணுவ ஹெலிகாப்டரில் அமெரிக்க அதிகாரிகளுக்கு மொழிபெயர்ப்பாளராக பணியாற்றி ஆப்கன் நபரின் உடலை தொங்கவிட்டு ரோந்து சென்ற காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது.
இது தங்களது விமானப்படை என தலைப்பை வைத்து தங்கள் டிவிட்டர் பக்கத்தில் தலிபான்கள் வெளியிட்டுள்ளனர். காபூலில் தாங்கள் விட்டு வைத்த ராணுவ விமானங்கள் மற்றும் தளவாடங்களை தலிபான்களால் காட்சி பொருளாக மட்டுமே வைக்க முடியும், அவர்களால் இயக்க முடியாது என அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகன் கூறியிருந்த நிலையில் அதை பொய்த்துப்போக வைக்கும் விதமாக தலிபான்கள் காட்சிகளை வெளியிட்டுள்ளனர்.
இந்த வீடியோ, ஆப்கன் விவகாரத்தில் அதிபர் ஜோ பைடனின் படுதோல்வியை உறுதி செய்வதாக ரிபப்ளிகன் செனட்டர் டெட் குரூஸ் டிவிட் செய்துள்ளார். ஒரு மனித உடல் தொங்கும் காட்சி துயரமானதும் , கற்பனைக்கு எட்டாததுமாகும் என அவர் விமர்சித்துள்ளார்.
அமெரிக்க விமானப்படைக்கு சொந்தமான அதிநவீன பிளாக்ஹாக் ஹெலிகாப்டரை அவர்கள் இயக்கும் வீடியோ வெளியாகி வைரலானது. காந்தகார் மாகாணத்தில் எடுக்கப்பட்ட அந்த வீடியோவில் ஹெலிகாப்டரில் மனித உடல் கட்டி தொங்கவிடப்பட்டு இருப்பது போன்றும் காட்சிகள் பதிவாகியுள்ளது.