தமிழகத்தில் கடந்த 100 நாட்களில் 63 பாலியல் சம்பவங்கள் நடந்திருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வரும் நிலையில் அரசு பள்ளியில் நடந்த கொடூரம் தமிழகத்தை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. தமிழ்நாட்டில் கடந்த சில காலமாக பாலியல் குற்றச்சாட்டுகள், கைது நடவடிக்கைகள் அதிகரித்து வருகின்றன. முக்கியமாக பள்ளிகளில் ஆசிரியர்களே மாணவிகளை வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக உள்ளது. இந்நிலையில் இன்றும் பாலியல் குற்றச்சாட்டில் ஒரு ஆசிரியர், ஒரு தலைமை ஆசிரியர் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றசாட்டுகள் அதிகரித்த வண்ணம் உள்ளது. போதை ஆசாமிகள்,செய்யும் குற்றங்களும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது அண்ணா பல்கலைக்கழக பாலியல் வன்கொடுமைக்கு விசாரணை நடந்து வரும் நிலையில் தற்போது தமிழகம் முழுவதும் பெண்கள் மாணவிகளின் அழுகுரல்கள் கேட்க துவங்கியுள்ளது.அதுஅதுமில்லாமல் சென்னை பழவந்தாங்கல் ரயில் நிலையத்தில் பெண் காவலரை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற நபர் கைதுசெய்யப்பட்ட சம்பவமும் அதிர்ச்சியை கிளப்பியுள்ளது. போலீசுக்கே இந்த நிலமையென்றால் சாதரண பெண்களுக்கு என்ன நிலைமை என பேச துவங்கி விட்டார்கள். கோவையில் 17 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை என லிஸ்ட் நீண்டு கொண்டே செல்கிறது இந்த அதிர்ச்சியில் மீளாத தமிழகம் தற்போது மற்றொரு அதிர்ச்சி இறங்கியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம், அரிமளம் அருகே உள்ள ஓா் அரசு உயா்நிலைப் பள்ளியில் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக புகாா் அளிக்கப்பட்டதன்பேரில், அப்பள்ளியின் உதவித் தலைமை ஆசிரியா் போச்கோ சட்டப் பிரிவுகளின் கீழ் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டாா்.புதுக்கோட்டை மாவட்டம், அரிமளம் அருகிலுள்ள ஒரு கிராமத்தில் செயல்பட்டு வரும் அரசு உயா்நிலைப் பள்ளியில் உதவித் தலைமை ஆசிரியராகப் பணிபுரிந்து வருபவா் தாஞ்சூரைச் சோ்ந்த பெருமாள் (58).இவா், அந்தப் பள்ளியில் படித்து வரும் மாணவிகளிடம் பாலியல் ரீதியாக தவறாக நடந்து கொண்டதாக மாவட்ட குழந்தைகள் நலக் குழுமத்தில் புகாா் அளிக்கப்பட்டது.
இதைத் தொடா்ந்து நடைபெற்ற விசாரணையை அடுத்து, 7 மாணவிகளிடம் பாலியல் ரீதியான தொந்தரவு செய்தது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா் வசந்தகுமாா் அரிமளம் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் திங்கள்கிழமை புகாா் அளித்தாா்.புகாரைத் தொடா்ந்து, போக்சோ சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்த போலீஸாா், பெருமாளை செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
இந்த நிலையில் அன்பில் மகேஷை வெளுத்து வாங்கிவிட்டார் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை. அவர் இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் புதுக்கோட்டை மாவட்டம் அரசுப் பள்ளியில், மாணவிகள் 7 பேருக்குப் பாலியல் தொல்லை அளித்த பள்ளி உதவித் தலைமையாசிரியர் கைது செய்யப்பட்டிருக்கிறார். தமிழகத்தின் ஒவ்வொரு மாவட்டங்களிலும், தொடர்ந்து பள்ளி மாணவிகள் பாலியல் தொல்லைக்கு உள்ளாக்கப்பட்டு வருகின்றனர். பள்ளிகளில் மாணவ மாணவியர் பாதுகாப்பை உறுதி செய்ய, ஆலோசனைக் குழுக்கள் அமைப்பதாகச் சொல்லி மூன்று ஆண்டுகள் கடந்து விட்டன. எந்தப் பள்ளிகளிலும் இந்தக் குழுக்கள் செயல்பாட்டில் இல்லை என்பதையே, தொடர்ந்து பள்ளி மாணவிகள் பாலியல் தாக்குதலுக்கு உள்ளாவது காட்டுகிறது. குழந்தைகள் பாதுகாப்புக்கான தேசிய அவசர உதவி எண் 1098க்கு அழைத்ததால் மட்டுமே, தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது.
பள்ளி செல்லும் நமது பெண் குழந்தைகளைப் பாதுகாப்பதில், தி.மு.க., அரசு முற்றிலுமாகத் தோல்வி அடைந்து விட்டது. இத்தனை தொடர் குற்றங்களுக்குப் பிறகும், பள்ளி மாணவ, மாணவியர் பாதுகாப்பை உறுதி செய்ய எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இனியும் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் மகேஷ் அமைச்சராகத் தொடரத் தகுதியோ, தார்மீக உரிமையோ இல்லை.
உடனடியாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் பதவியிலிருந்து, மகேஷ் விலக வேண்டும். முதல்வர் உடனடியாக, பள்ளிக் கல்வித் துறைக்குத் திறமையான, குழந்தைகள் நலனில் அக்கறை கொண்ட வேறு ஒருவரை அமைச்சராக நியமித்து, பள்ளிக் குழந்தைகள் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் அண்ணாமலை கூறியுள்ளார்.அன்பில் மகேசுக்கு திமுகவுக்கு உள்ளே எதிர்ப்புகள் கிளம்பியுளது. அண்ணாமலையை பாஜகவை வம்பிழுத்து போஸ்ட் போட தான் லாயக்கு அமைச்சருக்கு லாயக்கு இல்லை என தலைமையிடம் புகாரும் கொண்டு சென்றுள்ளதால் அன்பிலுக்கு வேறு அமைச்சர் பதவி கொடுக்கலாமா என ஆலோசனையில் இறங்கியுள்ளாராம் முதல்வர்.