இஸ்லாமியர்களின் தீமிதி திருவிழா…!! வைரலான வீடியோ! இந்துமத எதிர்ப்பாளர்கள் எங்கே! வச்சு செய்த நெட்டிசன்கள்!

இந்தியா அனைத்து மதத்தினருக்கும் சம உரிமைகளை கொடுத்துள்ள நாடு என்பது உலகிற்கே தெரியும்.
பல்வேறு மதங்கள் அவர்களின் கலாச்சாரங்களுக்கு மதிப்பளிப்பது எல்லாம் இந்தியாவில் மட்டுமே.

எந்த நாட்டிலும் இல்லாத அனைத்து மக்களுக்கும் சுதந்திரம் இங்கு உண்டு. முக்கியமாக கருத்து சுதந்திரம். அதுவும் அது குறிப்பிட்ட பெரும்பான்மையின மக்களின் நம்பிக்கையை கொச்சைப்படுத்தினால் கூட அது கருத்து சுதந்திரமாக பார்க்கப்படும் நாடு இந்தியா.

ஆம் இந்தியாவில் அரசியலுக்காக பெரும்பான்மையின மதத்தை மட்டும் தாக்கி இழிவு படுத்தி பேசும் ஒரு அரசியல் கூட்டம் எப்போதுமே உண்டு. அவர்கள் கண்ணிற்கு மற்றவை எதுவும் தெரியாது.

அனைத்து மதத்தினரும் அவரவர் கடவுளை வழிபடும் முறைகளை கொண்டுள்ளார்கள். ஆனால் இங்கு பெரும்பான்மை மதத்தை மட்டுமே எப்போதும் குறை கூறி சிறுபான்மையினரை ஓட்டுக்களை பெறுவதில் அரசியல் கட்சிகள் ஆர்வமாக உள்ளார்கள்.

தற்போது ட்விட்டரில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. அதில் சிறுபான்மை மார்க்கத்தை சேர்ந்த இருவர் சக இஸ்லாமியரின் கைகளை இருக்க பற்றிக்கொண்டு தீயில் போட்டு எடுக்கின்றனர். அந்த வீடியோவை நெட்டிசன்கள் பகிர்ந்து வருகின்றனர். மேலும் இந்து கடவுள் மறுப்பாளர்களை கேள்வியால் துளைத்து வருகின்றனர்.

உங்கள் கண்களுக்கு இவையெல்லாம் தெரியாதா..? இப்போது உங்கள் கொள்கை எங்கே போயிற்று என திட்டி தீர்க்கின்றனர். மேலும் ஒருவர் “மறுப்பது உங்கள் நம்பிக்கை எனில், வணங்குவது எங்கள் நம்பிக்கை.

இதில் தலையிட உங்களுக்கு துளியும் உரிமை இல்லை” என மிக சரியாக நெத்திபொட்டிலத்தாற்போல் கேட்டிருக்கிறார். அவரவர் வழிபாடு அவரவர் உரிமை. இதில் ஒரு மதத்தை மட்டும் குறைகூறுவது சமூக நல்லிணக்கத்தை குலைத்துவிடும் என சமூக வல்லுநர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

Exit mobile version