தமிழக ஊடகங்களை பொறுத்தவரையில் பாகுபாடுடன் நடந்து வருகிறது என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று.ஆசிபா வுக்கு 24 மணிநேரம் பிரேக்கிங் போட்ட தமிழக செய்தி நிறுவனங்கள் ஜெயஸ்ரீ குழந்தை சீரழிக்கப்பட்டு இறந்த போது வாயினை மூடி கொண்டு பார்த்து வந்தனர். அதுமட்டுமில்லாமல் தற்போது நடைபெற்ற சம்பவம் சரியாக சொல்லவேண்டும் அ.தி.மு.க எம்.எல்.ஏ சீனிவாசன் செருப்பை ஒரு பழங்குடி இனத்தவர் தூக்கி சென்றதுக்கு என்றால் சட்டையை கிழித்து கொண்டு சீறி பாய்ந்து விவாதம் நடத்தினார்கள்.
தி.மு.க ஆம்பூர் தொகுதி எம்.எல்.ஏ வின் செருப்பை ஒரு பட்டியலினஅதிகாரி ஒருவர் தூக்கி சென்றார். இரு சம்பவங்களும் கண்டிக்கக்கூடியவை ஆனால் தி.மு.க ஆம்பூர் எம்.எல்.ஏ என்பதால் தமிழக ஊடகங்களின் அமைதி காத்து விவாதம் நடத்தாமல் தங்களது நடுநிலையை நிரூபித்தார்காள் ! இது போல் சம்பவங்கள் ஏராளம். இந்த நிலையில் முகநூல் மூலமாக தேசியத்திற்கும், இந்து மதத்திற்கும், மோடிக்கும் ஆதரவாக ஒரே ஒரு கம்மெண்ட் போட்டால் கூட ஆயிரம் எதிர் கருத்துக்கள், கெட்டவார்த்தைகள் கம்மெண்ட்டை பின் தொடரும்.
2017 ஆம் ஆண்டு மாரிதாஸ் என்பவர் மோடிக்குது ஆதரவாகவும் தமிழக ஊடகங்களின் நடுநிலை தன்மை குறித்தும் திமுகவின் செயல்பாட்டு குறித்தும் நீளமான கட்டுரைகளை எழுதிக்கொண்டிருந்தார். பின்னர் அது வீடியோவாக வந்துபிரபலமடைய செய்தது. அது இப்போது திமுக மற்றும் அதன் ஆதரவு கட்சிகள் ஊடகங்கள் என அனைவருக்கும் தலைலைவலியாக மாறியுள்ளது.
இன்று, 1 கோடி உறுப்பினர்களுக்கு மேல் இருக்கிறார்கள் என்று சொல்லப்படும் கட்சி, 50 ஆண்டுகளாக MGR , ஜெயலலிதா போன்ற ஜாம்பவான்களை எதிர்த்து அரசியல் செய்த கட்சி, சில மாதங்களுக்கு முன்பு கூட யார் அந்த மாரிதாஸ் என்று நக்கலடித்த கட்சி இன்று தனது sitting MP முதல் மொத்த ecosystem யும் தூண்டிவிட்டு எந்த பின்புலமும் இல்லாத ஒரு சாதாரண youtube இல் வீடியோ போடும் நபரை பார்த்து கதறுகிறது.
இவ்வளவு கதறல்களுக்கு பின்னால் எவ்வளவு பாதிப்பு, வலி இந்த கூட்டத்திற்கு இருக்கிறது என்பதை புரிந்துகொள்ள முடிகிறது. நீங்கள் செல்லும் பாதை சரிதான் மாரிதாஸ். இதன் வீச்சை மேலும் அதிகப்படுத்துங்கள் என மாரிதாஸுக்கு ஆதரவு பெருகிவருகிறது. அதுமட்டுமில்லாமல் ஊடகவியலாளர் மதன் ரவிச்சந்திரனும் திக திமுக போன்ற கட்சிளுக்கு இன்னொருபுறம் தலைவலியாக ஆரம்பித்துள்ளது.
அர்னாப் கோஸ்வாமி தாக்கப்பட்ட போதும் RS பாரதி திட்டிய போதும் எங்கே போனது உங்கள் கருத்து சுதந்திரம்?எங்கே போனது இந்த கொந்தளிப்பு?