தமிழக பாஜக தலைவர் தமிழகம் முழுவதும் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளில் என் மண் என் மக்கள் யாத்திரை மேற்கொண்டு வருகிறார் இந்த யாத்திரை தமிழக மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது, அண்ணாமலை செல்லும் இடமெல்லாம் மக்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது. பள்ளி மாணவர்கள் முதல் வயதானவர்கள் வரை அண்ணாமலையை நோக்கி நகர்கிறார்கள். இதனால் திராவிட கட்சிகள் கலக்கமடைந்துள்ளது.
மேலும் என் மண் என் மக்கள் யாத்திரையின் நிறைவு விழாவில் பாரத பிரதமர் மோடி கலந்து கொள்கிறார்.
பாராளுமன்ற தேர்தலையொட்டி பாஜக அசுர வேகத்தில் வேலையை செய்து வருகிறது. கருத்து கணிப்புகள் அனைத்தும் பாஜகவிற்கு சாதகமாகவே அமைந்து வருகிறது. மூன்றவது முறையாக பிரதமராக மோடி பதவியேற்பது உறுதியாகியுள்ளது.
இந்த நிலையில் தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் வேலைகளை தமிழக பாஜக தொடங்கி கூட்டணி பேச்சுவார்த்தைகளில் இறங்கியுள்ளது. பா.ஜனதா கூட்டணியில் பா.ம.க.வுக்கு ஸ்ரீபெரும்புதூர், ஆரணி, மயிலாடுதுறை, தர்மபுரி, விழுப்புரம், கடலூர், அரக்கோணம் ஆகிய 7 தொகுதிகள் தே.மு.தி.கவுக்கு கள்ளக்குறிச்சி உட்பட 2 தொகுதிகள்.டி.டி.வி.தினகரனின் அ.ம.மு.க.வுக்கு திருச்சி, சிவகங்கை.ஓபிஎஸ் மகனுக்கு தேனி பச்சமுத்துவுக்கு பெரம்பலூர் ஏ.சி. சண்முகத்துக்கு வேலூர் ஜி.கே.வாசனுக்கு தஞ்சை கூட்டணி கட்சிகளுக்கு 16 தொகுதிகளை ஒதுக்கியது போக மீதமுள்ள 23 தொகுதிகளில் பாரதிய ஜனதா கட்சி போட்டியிட முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது .
இந்நிலையில் தமிழக பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலையின் என் மண் என் மக்கள் நடைப்பயண நிறைவு விழா பொதுக் கூட்டம் திருப்பூரில் நடைபெறுகிறது. இந்த நிறைவு விழா பொதுக் கூட்டத்தை பிரமாண்ட முறையில் நடத்த தமிழக பாஜக தீவிரம் காட்டி வருகிறது. 400 ஏக்கர் பரப்பளவில் பொதுக்கூட்டத்தை நடத்தவும் சுமார் 5 லட்சம் மக்கள் பங்குபெறும் வகையில் மிக பிரமாண்டமாக நடைபெறவுள்ளது.
இந்த நிறைவு விழாவில் பிரதமர் மோடி கலந்து கொள்ள உள்ளார். அந்த விழாவில் ஜிகே வாசன், டாக்டர் கிருஷ்ணசாமி, ஜான் பாண்டியன், ஏ.சி.சண்முகம், பாரிவேந்தர், அன்புமணி ராமதாஸ், பிரேமலதா விஜயகாந்த், டிடிவி தினகரன், ஓ.பன்னீர் செல்வம், சசிகலா ஆகியோரை மேடையில் ஏற்ற வேண்டும் என்று அண்ணாமலை அவர்கள் தீவிரம் காட்டி வருகிறார்
பிரதமர் மோடியின் மேடையில் அனைத்து தலைவர்களையும் ஒருங்கிணைத்துவிட்டால் அதுவே அண்ணாமலையின் கிராஃபை பெரியளவில் உயர்த்தும். அதே சமயம் எடப்பாடி பழனிசாமிக்கு அது கடும் நெருக்கடியை உருவாக்கிவிடும்.மேலும் கொங்கு மண்டலம் அதிமுக கோட்டை என்ற பிம்பம் சுக்குநூறாகிவிடும். இந்த பொது கூட்டம் தமிழக பாஜகவிற்கு திருப்பம் தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.பாஜகவிற்கு திருப்பம் தரும்.