தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவிக்கும் படி ஹிந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு கெஞ்சிய காணொளி தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
நிகழாண்டு 22-ம் தேதி தருமபுரம் ஆதீனம் மடத்தின் பட்டினப்பிரவேசம் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. கடந்த 500 ஆண்டுகளுக்கும் மேலாக இந்நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. ஹிந்துக்கள் சார்ந்த நிகழ்ச்சி என்பதால் வழக்கம் போல திராவிடர் கழகத்தினர் இதற்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்து இருந்தனர். இதையடுத்து, தருமபுரம் ஆதீனத்தின் பட்டினப்பிரவேசம் நிகழ்ச்சிக்கு தடை விதிக்கப்படுகிறது என மே 2-ம் தேதி மயிலாடுதுறை கோட்டாட்சியர் ஜெ.பாலாஜி அதிரடி உத்தரவினை பிறப்பித்து இருந்தார். தி.மு.க அரசின் இச்செயலுக்கு பல்வேறு தரப்புகளிலுமிருந்து கடும் கண்டனங்கள் குவிந்தன.
தருமபுர ஆதீனத்தின் பல நூற்றாண்டுகள் பழமையான ‘பட்டின பிரவேசம்’ மீதான தடை தமிழக நாகரிகம் மற்றும் கலாச்சாரத்திற்கு எதிரானது. ஆதினத்தைத் தோளில் சுமக்க நான் நேரில் வருவேன் என்பதைத் தமிழக அரசுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன்..
இந்த சட்டவிரோத உத்தரவை எதிர்த்து நிகழ்ச்சியை நடத்த அனுமதிக்குமாறு ஆதினத்திடம் கோரிக்கை வைப்போம். கோபாலபுர குடும்பத்தை அவரது கட்சியினர் தூக்கிச் சுமப்பதை போல் அல்ல இது. ஊழியம் மற்றும் குருவுக்குச் செய்யும் சேவையின் உள்ள வேறுபாடுகளைக் கூட அறியாதவர் இந்த கோபாலபுர குடும்பத்தார் இந்த நிகழ்ச்சியை நடத்திக் காட்ட தயாராக இருக்கிறது என்று தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை அதிரடியாக கருத்து தெரிவித்து இருந்தார்.
இதனை தொடர்ந்து, பட்டினப் பிரவேச நிகழ்ச்சியினை நடத்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாய்மொழியாக அனுமதி அளித்து இருந்தார். இது பா.ஜ.க.வின் அறை கூவலுக்கு கிடைத்த வெற்றி என அக்கட்சியினர் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில், ஶ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் மற்றும் ஹிந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு கூட்டாக பத்திரிக்கையாளர்களை சந்தித்தனர். அப்பொழுது, ஜீயர் பேச முற்படும் பொழுது முதல்வருக்கு நன்றி சொல்லுங்க, முதல்வருக்கு நன்றி சொல்லுங்க என அமைச்சர் கெஞ்சிய காணொளி தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
நன்றி மீடியான்
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















