Thursday, March 12, 2026
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home அரசியல்

பிரதமர் மோடி விரித்த வலை.. சிக்கிய எதிர்கட்சிகள்…சிலிண்டருக்கு ரூ.100 எப்போ தருவீங்க…?

Oredesam by Oredesam
August 31, 2023
in அரசியல், செய்திகள், தமிழகம்
0
Prime Minister Narendra Modi

Prime Minister Narendra Modi

FacebookTwitterWhatsappTelegram

பிரதமர் மோடி அதிரடியாக அறிவித்த சிலிண்டர்களின் விலை 200 ரூபாய் குறைப்பு தமிழகத்தில் தி.மு. க அரசுக்கு பெருத்த சவாலாக உருவெடுத்து இருக்கிறது.

நாடு முழுவதும் ரக்ஷா பந்தன் கொண்டாடி வருகின்றார்கள். இந்த நிலையில் பிரதமர் மோடி அதிரடி அறிவிப்பை வெளியிட்டார். வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலை 200 ரூபாய் குறைப்பு
என்ற அறிவிப்பு குடும்ப தலைவிகளுக்கு வரப்பிரசாதமாக அமைந்தது.

READ ALSO

BREAKING || த.வெ.க-வின் தேர்தல் வாக்குறுதிகள்.. அனல் பறக்க அறிவித்தார் விஜய்..!

போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் 48 மணி நேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் மோடி போனில் பேச்சு..!

பிரதமர் மோடி தலைமையில் டெல்லி நகரில் மிக அண்மையில் நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை குறைப்பு பற்றிய இந்த முக்கிய முடிவு எடுக்கப்பட்டது. அதன்படி, நாடு முழுவதும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை 200 ரூபாய் குறைத்து மத்திய அரசு அறிவித்துள்ளது. அதேபோல், உஜ்வாலா திட்டத்தின்கீழ் உள்ள பயனாளிகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டருக்கு கூடுதலாக 200 ரூபாய் மானியமாக வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

இதன்மூலம் 10.35 கோடி பேர் பயனடைவார்கள். இதற்காக மத்திய அரசுக்கு ஒரு ஆண்டுக்கு 7,500 கோடி ரூபாய் செலவினம் ஏற்படும். இனி உஜ்வாலா திட்டத்தின்கீழ் சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்குவோர் 700 ரூபாய்க்கும், மற்றவர்கள் 900 ரூபாய்க்கும் சிலிண்டர்களை வாங்க முடியும்.

பிரதமர் மோடியின் இந்த அறிவிப்பு இவ்வாண்டின் இறுதியில் நடைபெறும் மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், தெலுங்கானா, மிசோரம் மாநில சட்டப்பேரவை மற்றும் 2024 நாடாளுமன்றத் தேர்தலை மனதில் வைத்து வெளியிடப்பட்டது என்று காங்கிரஸ், சமாஜ்வாடி, ஆம் ஆத்மி, மார்க்சிஸ்ட், திரிணாமுல் காங்கிரஸ், ஐக்கிய ஜனதா தளம், பாரதிய ராஷ்டிர சமிதி கட்சிகள் குறை கூறினாலும் அவர்களுக்கு வேறொரு விதத்தில் செக் வைப்பதாகவே இது அமைந்துள்ளது.

ஏனென்றால் இனி சட்டப்பேரவை தேர்தலுக்காக எதிர்க்கட்சிகள் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையை குறைப்போம் என்று தேர்தல் வாக்குறுதி அளிக்க தயங்கும் நிலையை ஏற்படுத்தி இருக்கிறது. ஒருவேளை இதையும் மீறி அறிவித்தால் ஒரு சிலிண்டருக்கு 600 ரூபாய் வரை குறைப்போம் என்றுதான் அவர்களால் அறிவிக்க முடியும்.

ஏற்கனவே ராஜஸ்தான் மாநிலத்தில் வறுமை கோட்டுக்கு கீழேயுள்ள 14 லட்சம் ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்த பெண்களுக்கு மட்டும் 500 ரூபாய் விலை குறைப்பு என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டு இருந்தாலும் அந்த மாநில அரசுக்கு அது ஒரு பெரிய நிதிச் சுமையாகவே அமைந்து விட்டது.

உஜ்வாலா பயனாளிகளுக்குமத்திய அரசு மேலும் 200 ரூபாயை குறைத்து இருப்பதால், ராஜஸ்தான் அரசு இன்னும் 200 ரூபாய் விலையை குறைக்கவேண்டும் என்கிற கோரிக்கை அந்த மாநிலத்தில் தீவிரமாக எழுவதற்கான வாய்ப்புகளே அதிகம். ஏனென்றால் மத்திய அரசே 400 ரூபாய் குறைத்து விட்ட பிறகு 100 ரூபாய் என்பது மிகக்குறைவான தொகையாகவே கருதப்படும்.

அதேபோல தமிழகத்தில் 2021 தேர்தலில் சிலிண்டர் மானியம் 100 ரூபாய் வழங்கப்படும் என்று திமுக அளித்த வாக்குறுதியை இதுவரை நிறைவேற்றவில்லை.அதனால் நீங்க எப்போ தருவீங்க? தேர்தல் வாக்குறுதியை நிறைவேத்துவீங்களா?…. மாட்டீங்களா?… என்று திமுக அரசை நோக்கி தமிழக மக்கள் கேள்வி கேட்கும் நிலையும் ஏற்பட்டுவிட்டது.

மேலும் 27 மாதங்களுக்கு தமிழக மக்கள் குறைந்த பட்சம் 22 கேஸ் சிலிண்டராவது வாங்கி இருப்பார்கள். அப்படியென்றால் 2200 ரூபாய் நிலுவையில் இருக்கிறதே அதையும் சேர்த்து தருவீங்களா?… என்ற கேள்விகளும் திமுக அரசிடம் எழுப்பப்படலாம்.

அது மட்டுமல்ல, 2021 தேர்தலில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் பெட்ரோல் விலையை லிட்டருக்கு ஐந்து ரூபாய் குறைப்போம், டீசல் விலையை நான்கு ரூபாய் குறைப்போம் என்று வாக்குறுதி அளித்தீர்கள். ஆனால் பெட்ரோலுக்கு மட்டும் இரண்டு ரூபாய் குறைத்தீர்கள். மீதி 3 ரூபாயை எப்போது குறைப்பீர்கள்? டீசல் விலை குறைப்பை பற்றி மூச்சே காணோமே?…என்ற கிடுக்குபிடி கேள்விகளும் முதலமைச்சர் ஸ்டாலினை நோக்கி தமிழக எதிர்க்கட்சிகள் கேட்கும் நிலையும் உருவாகும்.

தவிர மாநில பாஜக தலைவர் அண்ணாமலை,”இந்த நேரத்தில், சமையல் எரிவாயு சிலிண்டர் ஒன்றுக்கு 100 ரூபாய் மானியமாக வழங்குவதாக தேர்தல் வாக்குறுதி எண் 503-ல் கூறிய ஊழல் திமுக, ஆட்சிக்கு வந்து 27 மாதங்கள் கடந்தும் அந்த வாக்குறுதியை நிறைவேற்றுவது குறித்து எந்த அக்கறையும் இல்லாமல் இருப்பதை நினைவுபடுத்த விரும்புகிறோம்” என்று கிண்டலடித்தும் இருக்கிறார்.

ShareTweetSendShare

Get real time update about this post categories directly on your device, subscribe now.

Unsubscribe

Related Posts

TVK தலைவர் விஜய், தமிழக அரசியலில் வெட்டிக்கழக தலைவராக மாறக்கூடாது-பாஜக நிர்வாகி அறிக்கை.
அரசியல்

BREAKING || த.வெ.க-வின் தேர்தல் வாக்குறுதிகள்.. அனல் பறக்க அறிவித்தார் விஜய்..!

March 7, 2026
கிழக்கு ஆசிய உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி சொன்ன முக்கிய வார்த்தை.
செய்திகள்

போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் 48 மணி நேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் மோடி போனில் பேச்சு..!

March 5, 2026
வருங்கால தமிழக அரசியலில் மாற்றம் தரும் தலைவர் யார்..? உங்கள் கருத்து.
இந்தியா

வருங்கால தமிழக அரசியலில் மாற்றம் தரும் தலைவர் யார்..? உங்கள் கருத்து.

February 20, 2026
vanathi Srinivasan
அரசியல்

பட்டபகலில் தொடரும் குற்ற சம்பவங்கள் தமிழகத்தை வன்முறை மாநிலமாக மாற்றும் திமுக-வானதி சீனிவாசன் கண்டனம் !

February 4, 2026
Annamalai
செய்திகள்

பள்ளி மாணவர்களிடம் கஞ்சா ! கஞ்சா வியாபாரிகளுக்கு பதவி தரும் திமுக அண்ணாமலை ஆவேசம்.

February 4, 2026
“வேல்மாறல் கந்தசஷ்டி கவசம் விளக்கம்” நூல் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட அண்ணாமலை.
அரசியல்

“வேல்மாறல் கந்தசஷ்டி கவசம் விளக்கம்” நூல் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட அண்ணாமலை.

February 3, 2026

POPULAR NEWS

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

November 7, 2021
ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது  ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

October 29, 2021
தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

November 7, 2021
சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

November 11, 2021
ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

November 2, 2021

EDITOR'S PICK

16 வயது  சிறுமியை ஏமாற்றி கற்பழித்த அக்பர் ஷேக்!

சிறுமிகளுக்கு எதிராக தொடரும் அவலம் கடுமையான நடவடிக்கை எடுக்குமா திமுக அரசு !

October 11, 2024
Narendra Modi

இந்தியா நிலவில் இறங்குகிறது.,பாகிஸ்தான் குழந்தைகள் சாக்கடையில் விழுகிறார்கள் ” – பாகிஸ்தான் எம்.பி., பேச்சு வைரல்

May 16, 2024
ராகு கேது பெயர்ச்சியில் 2023 மேஷ ராசியினருக்கு அடிக்கும் ஜாக்பாட் என்ன ?

ராகு கேது பெயர்ச்சியில் 2023 மேஷ ராசியினருக்கு அடிக்கும் ஜாக்பாட் என்ன ?

October 29, 2023
பாஜகவின் துள்ளி வரும் வெற்றிவேலைக் கண்டு கழகங்கள் கதறுவது  ஏன்?

பாஜகவின் துள்ளி வரும் வெற்றிவேலைக் கண்டு கழகங்கள் கதறுவது ஏன்?

November 9, 2020

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • சேமிப்பு
  • தமிழகம்
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • ராசிபலன்
  • விளையாட்டு

Recent Posts

  • BREAKING || த.வெ.க-வின் தேர்தல் வாக்குறுதிகள்.. அனல் பறக்க அறிவித்தார் விஜய்..!
  • போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் 48 மணி நேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் மோடி போனில் பேச்சு..!
  • தமிழக வெற்றிக் கழகத்துடன்(TVK) இனி யார் கூட்டணிக்கு வர வாய்ப்புள்ளது..?
  • வருங்கால தமிழக அரசியலில் மாற்றம் தரும் தலைவர் யார்..? உங்கள் கருத்து.

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
x