துக்கோட்டை மாவட்டத்தித்தில் முடிவடைந்த திட்டங்களை தொடங்கி வைத்து புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி பல்வேறு துறை சார்பில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குவதற்காக கடந்த 8ஆம் தேதி தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகை தந்தார்.
அப்போது மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு முதலமைச்சருக்கு ‘அறியப்படாத கிறிஸ்தவம்’ என்ற கிறிஸ்தவ மதம் சார்ந்த புத்தகத்தை வழங்கினார் ஆட்சியரின் முகநூல் பக்கத்தில் முதலமைச்சருக்கு வழங்கிய கிறிஸ்தவ நூலைப்பற்றி பதிவு செய்திருந்தார். இதற்கு பாஜக உள்ளிட்டோர் எதிர்ப்பு தெரிவித்திருந்த நிலையில் அவர் போட்டிருந்த பதிவை ஆட்சியர் நீக்கம் செய்தார்.
இந்நிலையில், புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்று வரும் நிலையில், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் சுதந்திர போராட்ட தியாகிகளின் படத்தை ஆட்சியர் கவிதா ராமு திறந்துவைத்தார்.
அப்போது அங்கு வந்த புதுக்கோட்டை மாவட்ட பாஜக பொதுச்செயலாளர் முரளி மற்றும் விஜயகுமார் தலைமையில் பாஜக வினர் கண்ணதாசன் எழுதிய ‘அர்த்தமுள்ள இந்து மதம்’ என்ற நூலை ஆட்சியர் கவிதா ராமுவுக்கு வழங்கிச் சென்றனர்.
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















