ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் அருகே கருப்ப குடும்பன் பச்சேரி கிராமத்தில் வளர்மதி என்பவர் வசித்து வருகிறார்.
இந்நிலையில் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக வளர்மதியை இந்து மதத்தில் இருந்து கிருத்துவ மதத்திற்கு மாறும்படி, அக்கிராமத்தில் உள்ள கிருத்துவர்கள் கட்டாயப்படுத்தி, தொடர்ந்து தொந்தரவு செய்து வருவதோடு வளர்மதியின் மகனை அடித்து துன்புறுத்தி கொலை முயற்சி செய்து வருவதாகவும் கூறப்படுகிறது,
இதுகுறித்து ஆர்.எஸ். மங்கலம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தும், எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காததால், மன உளைச்சல் அடைந்த வளர்மதி இன்று (16/05/2022) மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பணியில் இருந்த தீயணைப்பு துறையினர் படையினர் மற்றும் காவல்துறையினர் அவரைக்காப்பாற்றினர்.
பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த மாவட்ட வருவாய் அலுவலர் காமாட்சி கணேசன் வளர்மதியின் குறைகளை கேட்டறிந்து தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். இதனையடுத்து சிகிச்சைக்காக வளர்மதி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
இதற்கு சம்பந்தப்பட்ட காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்ட வளர்மதி வலியுறுத்தி உள்ளார்.
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















