சட்டமன்ற தேர்தலுக்கு முன்னர் தி.மு.க தனது தேர்தல் அறிக்கையில் பல்வேறு திட்டங்களை அறிவித்தது. அதில் முக்கியமான ஒன்று நீட் தேர்வு ரத்து . திமுகவின் பிரச்சார முழக்கம் நீட் தேர்வு ரத்து, தான் சட்டமன்ற கூட்ட தொடரின் முதல் கையெழுத்து நீட் தேர்வு ரத்து என திமுக தலைவர் தற்போதைய தமிழக முதல்வருமான ஸ்டாலின் அவர்கள் தீவிர பிரச்சாரம் செய்தார்.நாங்கள் ஆட்சிக்கு வந்த 100 வது நாளில் நீட் தேர்வு நீக்கப்படும் என்ற வாக்குறுதியை அளித்தார் மு. க.ஸ்டாலின்
நீட் தேர்வை ரத்து செய்வது தமிழக அரசின் அதிகாரத்திற்கு உட்பட்டது இல்லை என்று பலர் கூறி வந்தபோதிலும் திமுக அரசு மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு நீட் தேர்வு ரத்து செய்வோம் என்று வாக்குறுதியை தொடர்ந்து வழங்கி வந்தது என்பது குறிப்பிடத்தக்கது. திமுக ஆட்சிக்கும் வந்துவிட்டது நீட் தேர்வை ரத்து செய்வார்கள் என அனைவரும் உற்று நோக்கும் வகையில் முதல்வர் ஸ்டாலின் நீட் தேர்வு சாதக பாதகங்களை ஆராய ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன்தலைமையில் குழு அமைத்து நீட் தேர்வினை பற்றி ஆராய்ந்து வருகிறார்கள். அதன் அறிக்கையை முதல்வரிடம் நாளை வழங்க உள்ள நிலையில் முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
இந்த நிலையில் முதல்வர் தனது அறிக்கையில்
“மாணவர்களின் உரிமை மட்டுமல்ல, நீதியரசர் ஏ.கே. ராஜன் குழுவின் அறிக்கை, அதன் மூலமாக தமிழ்நாடு அரசு எடுக்கும் அடுத்தகட்ட சட்ட நடவடிக்கைகள் ஆகியவை அடுத்தடுத்த காலங்களில் வரிசையாக நடக்க இருக்கின்றன. இந்த ஆண்டுக்கான தேர்வுத் தேதி அதற்குள் அறிவிக்கப்பட்டுவிட்டதால் இந்த நடவடிக்கைகள் அதற்குள் முடிவடைய இயலாத சூழல் உள்ளது. தமிழ்நாடு அரசு, சட்டபூர்வ நடவடிக்கையில் இருக்கும் இந்த நேரத்தில் நடக்கும் இந்த ஆண்டுக்கான தேர்வை எதிர்கொள்ளும் நெருக்கடிமிகு சூழல் மாணவர்களுக்கு ஏற்பட்டுள்ளது உண்மையில் வருந்தத்தக்கதே. ஆனாலும் இறுதியில், நீட் தேர்வினால் நமது மாணவர்களுக்கு ஏற்படும் பாதிப்புகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தோம் என்ற நிலையை நிச்சயம் உருவாக்குவோம்.” என்று முதலமைச்சர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















