கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் சட்டமன்ற தொகுதியில் அதிமுக கூட்டணி வேட்பாளர் பாஜகவை சேர்ந்த கலிவரதன் இன்று திருக்கோவிலூர் தேர்தல் நடத்தும் அலுவலர் சாய்வர்தினி முன்னிலையில் தமது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.
இந்நிகழ்வில் அதிமுக பாஜக பாமக தமிழ் மாநில காங்கிரஸ் புரட்சிபாரதம் உள்ளிட்ட கூட்டணிக் கட்சி தொண்டர்கள் திரளாக வரவேற்பளித்தனர் வேட்புமனு தாக்கலின்போது அதிமுக நகர செயலாளர் சுப்பிரமணியன் மற்றும் பாஜக மாநில செயலாளர் கார்த்தியாயனி உடனிருந்தனர்