கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் சட்டமன்ற தொகுதி அதிமுக கூட்டணியில் உள்ள பாஜகவிற்கு ஒதுக்கப்பட்டது. இந்த நிலையில் திருக்கோவிலூர் சட்டமன்ற தொகுதி பாஜக வேட்பாளராக கடந்த சில நாட்களுக்கு முன்பு கட்சியின் தலைமையகத்தில் இருந்து விழுப்புரம் மாவட்ட பாஜக தலைவரான வி.ஏ.டி.கலிவரதன் அவர்களை திருக்கோவிலூர் சட்டமன்ற தொகுதி வேட்பாளராக அறிவித்தனர். இன்று வேட்பாளர் அறிமுக கூட்டம் நடைபெற்றது. இந்த வேட்பாளர் அறிமுக கூட்டத்திற்கு சட்டத்துறை அமைச்சருமான சி.வி.சண்முகம், மாவட்ட செயலாளர் இரா.குமரகுரு, கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் பிரபு உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர். பின்னர் பேசிய சட்டத்துறை அமைச்சர் சிவி சண்முகம் அதிமுக நிர்வாகிகள் தங்களுக்கு திருக்கோவிலூர் சட்டமன்ற தொகுதியை அதிமுக விற்கு ஒதுக்கப்படவில்லை என்ற வருத்தத்தில் இருந்தாலும் கூட்டணிக் கட்சியினரை வெற்றிபெறச் செய்வதே அதிமுக வெற்றியடைய செய்வதற்கான வழி என அவர் தெரிவித்தார் எனவே அனைத்து கூட்டணி கட்சி நிர்வாகிகளும் பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர்களை வெற்றிபெறச் செய்ய திண்ணை பிரச்சாரத்தை மேற்கொள்ள வேண்டுமெனவும் சட்டத்துறை அமைச்சர் சிவி சண்முகம் கேட்டுக்கொண்டார் .இந்நிகழ்வில் அஇஅதிமுக, பாஜக,பாமக,தமாகா,புரட்சி பாரதம் உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















