சோளிங்கர் கோயிலில் இந்து சமய அறநிலையில் அந்தோனி என்பவர் வேலை செய்கிறார் இவர் சோளிங்கர் பிரசித்தி பெற்ற கோவில் பெருமாளுக்கு நடக்க வேண்டிய திருமஞ்சனத்தை(அபிஷேகம்) தடுத்து நிறுத்தி இருக்கிறார். இது குறித்து சர்ச்சைகள் பல எழுந்தன . அரசு விதிகளுக்கு உட்படுத்த்தான் கோவில்கள் அனைத்தும் மூடியுள்ளார்கள். கூட்டம் இல்லாமல் கடவுளுக்கு செய்ய வேண்டிய பூஜைகள் செய்யலாம் என அரசு அறிவித்துள்ளது. இந்த நிலையில் அந்த பூஜைகளை கூட செய்ய விடாமல் தடுத்துள்ளார் அத்தோணி என்பவர் இவர் எவ்வாறு அறநிலைய துறையில் சேர்ந்தார் என்பது கேள்விக்குறி, இதற்கிடையில் சோளிங்கர் நரசிம்மருக்கு நடக்க வேண்டிய திருமஞ்சனத்தை தடை விதித்தது பற்றி டாக்டர் பிரதீப் கேள்விக்கு வேளுக்குடி ஸ்வாமி பதில்:
“அடியேனும் ஸ்வாமி தொட்டையாசார்யர் சிஷ்யன். திருவோணத்தன்று கேசவப் பெருமாள் திருமஞ்ஜனம் நிறுத்தப்பட்டது தவறு. காரணமானவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். ஆசார்ய ஸ்வாமிகள் எடுத்துச் சொல்லி வெள்ளிக்கிழமை பெரிய மலையிலும் ஞாயிற்றுக்கிழமை (இன்று) சின்ன மலையிலும் திருமஞ்ஜனம் நடந்தது.” என பதில் அளித்துள்ளார்.
அறநிலைய துறை பிடியிலிருந்து கோவில்களை விடுவிக்க வேண்டும் எடப்பாடி அரசு என இந்து மக்கள். கோரிக்கை வைத்து வருகின்றார்கள்.
